பெண் சிங்கமாக கர்ஜிக்கும் ஆர்த்தி.. குஷ்பூ போட்ட பதிவு

Khushbu : கடந்த சில நாட்களாகவே இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது ரவி மோகனின் திருமண வாழ்க்கை தான். அதாவது ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை விட்டிருந்தார்.

ஆனால் ஆர்த்தி விவாகரத்து கொடுப்பதில் மனமில்லாமல் இருந்தார். இந்த சூழலில் சமீபத்தில் ஐசரி கணேஷ் திருமண விழாவில் ரவி மோகன் ஜோடியாக கெனிஷா உடன் வந்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அது மட்டுமல்லாமல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆர்த்தி ஒரு நீண்ட அறிக்கை விட்டிருந்தார். இந்த சூழலில் ஆர்த்திக்கு ஆதரவாக ராதிகா, குஷ்பூ போன்ற நடிகைகள் இருந்தனர்.

ஆர்த்திக்கு ஆதரவாக குஷ்பூ போட்ட பதிவு

khushbu
khushbu

இப்போது குஷ்பூ தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்ட பதிவு தான் பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. அதாவது இரண்டு குட்டிகளுடன் ஒரு பெண் சிங்கம் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதில் வெளியே யாருக்கும் தெரியாத ரணங்களுடன் ஒரு தாய் போராடி வருகிறார். அவருக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும். கடைசி வரை காப்பாற்றுவேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டு அதைக் காப்பாற்றாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்.

தனது குழந்தைகளுக்காக இந்த தாய் பல கஷ்டங்களைக் கடந்த வருவதாக குறிப்பிட்டிருக்கிறார். ஆர்த்திக்காக இந்த பதிவை குஷ்பூ போட்ட நிலையில் இதற்கு ஆதரவாக பலர் கமென்ட் செய்து வருகிறார்கள்.