அரசியை பிளாக்மெயில் பண்ணும் குமரவேலு, வரும் புது பிரச்சனை.. அவமானப்பட போகும் பாண்டியன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி கல்யாணத்திற்காக முகூர்த்த புடவை எடுப்பதற்கு பாண்டியன் வீட்டிலிருந்து மீனா செந்தில் கதிர் ராஜி அரசி கிளம்பி விட்டார்கள். அப்பொழுது தங்கமயிலும் போயிட்டு வரட்டும் என்று பாண்டியன் சொன்ன நிலையில் சரவணன் வேண்டாம் என்று சொல்லி தங்கமயிலே வீட்டிலேயே முடக்கிவிட்டார்.

உடனே தங்கமயில், சரவணன் இடம் நான் செஞ்சது தப்புதான் என்னை மன்னித்து விடுங்கள் என்று அழுது கொண்டே மன்னிப்பு கேட்கிறார். ஆனால் சரவணன் எவ்வளவு ஈஸியா நீ மன்னிப்பு கேட்க, ஆனால் நான் முட்டாளாக இருந்ததை நினைத்து என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. முதலில் அரசி கல்யாணம் நல்லபடியாக முடியட்டும்.

அதன் பிறகு உன்னுடைய படிப்பு விஷயத்தை நான் வீட்டில் சொல்கிறேன். என்னுடைய அப்பா அம்மா என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதன்படி நான் நடந்து கொள்வேன் என்று சொல்லி ஆபீஸ்க்கு கிளம்பி விடுகிறார். அடுத்ததாக எல்லோரும் காரில் கிளம்பும் பொழுது அரசி போவதை குமரவேலு மறைந்திருந்து பார்க்கிறார். அப்பொழுது அங்கே வந்த சக்திவேல், உன்னால் இப்படி மறைந்து இருந்து தான் பார்க்க முடியும்.

வேறு எதுவும் பண்ண முடியாது என்று திட்டி விட்டுப் போய் விடுகிறார். உடனே கோவப்பட்ட குமரவேலு, நண்பர் ஒருவருக்கு கால் பண்ணி அரசியுடன் குமரவேலு போட்டோவை இணைத்து நெருக்கமாக ஜோடித்து போட்டோவை ரெடி பண்ணி வேண்டும் என கேட்கிறார். உடனே அவரும் சரி என்று சொல்லி குமரவேலு போட்ட பிளான் படி அரசி மற்றும் குமரவேலு போட்டோ வரப்போகிறது.

இதை வைத்து குமரவேலு, அரசியை பிளாக் மெயில் பண்ணி காரியத்தை சாதிக்கலாம் என்று நினைக்கிறார். அந்த வகையில் பாண்டியன் குடும்பமும் அவமானப்பட்டு நிற்கப் போகிறது. ஆனால் அரசி எதற்கும் பயப்படாமல் குமரவேலு பிளாக்மெயில் பண்ற விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னால் நிச்சயம் அவர்கள் குமரவேலுக்கு சரியான பதிலடி கொடுத்து அரசியை காப்பாற்றுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.