ரவுடித்தனம் பண்ணி தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட முத்து.. சகலையை வச்சு செய்யப் போகும் அருண்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து எந்த அளவுக்கு நல்லவரோ அதுக்கு ஏற்ற மாதிரி திமிரு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அதனால் தான் தேவையில்லாத பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். ஆரம்பத்தில் இருந்து டிராபிக் போலீஸ் அருண் உடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்ட முத்து தற்போது செய்யாத ஒரு தவறுக்கு மாட்டிக்கொண்டார்.

அதாவது கார் ஓட்டும்போது பிரேக் ஒயர் பிடிக்காததால் அருண் பைக்கை தள்ளிவிடும் படி ஆகிவிட்டது. இதனால் காத்திருந்த அருணுக்கு ஒரு விஷயம் தொக்காக மாட்டியது போல் இந்த விஷயத்தை வைத்து முத்துவை கஷ்டப்படுத்தலாம் என பிளான் பண்ணிவிட்டார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மீனா, முத்து மீது எந்த தவறும் இருக்காது என புரிந்து கொண்டு முத்துவை கூட்டிட்டு அவருக்கு தெரிந்த ஒரு போலீஸிடம் போய் உதவி கேட்கிறார். போலீசும் நான் விசாரித்து பிரச்சினை முடித்து வைக்கிறேன் அதுவரை தேவையில்லாத எந்த விஷயத்திலும் தலையிட வேண்டாம்.

முக்கியமாக அருண் இருக்கும் பக்கம் தலை வைத்து கூட படுக்க வேண்டாம் என சொல்லி இருந்தார். ஆனால் அதைக் கேட்காமல் முத்து நண்பர்களை கூட்டிட்டு தண்ணி அடித்து விட்டு அருண் வீட்டு வாசலில் நின்று பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார்கள். உடனே அருண், இதுதான் சான்ஸ் என்று முத்து பண்ணும் ரவுடித்தனத்தை வீடியோ எடுத்து விடுகிறார்.

அந்த வீடியோவை பார்த்த போலீஸ், முத்துவை கூப்பிட்டு உனக்கு காரும் கிடையாது. லைசென்ஸ் கொடுக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார். சும்மா இருந்த சங்க ஊதிப் பெருசு ஆக்கியதாலும், ரவுடித்தனம் பண்ணியதாலும் முத்து மட்டுமில்லாமல் மீனாவும் தற்போது அவதிப்பட்டு வருகிறார்.

இதற்கிடையில் மீனாவின் தங்கை சீதா, டிராபிக் அருண் போலீஸ் வீட்டிற்கு சென்று பேசி விட்டு அருண் அம்மாவுடன் கோவிலுக்கு போகிறார். அதுவரை முத்து பிரச்சனையில் மாட்டிக் கொண்ட விஷயம் சீதாவிற்கு தெரியவில்லை.

இனி அடுத்து தெரிய வரும் பொழுது முத்து தான் சீதாவின் மாமா என்று அருண் புரிந்து கொண்டு இந்த பிரச்சினையிலிருந்து முத்துவை காப்பாற்றி விடுவார். அதுவரை டிராபிக் போலீஸ் அருண், முத்துவை வச்சு செய்யப் போகிறார்.