Ravi Mohan : ஐசரி இல்ல திருமண விழாவில் பாடகி கெனிஷா உடன் ஜோடியாக ரவி மோகன் கலந்து கொண்டார். இதை அடுத்து அதே நாளில் ஆர்த்தி ரவி ஒரு நீண்ட அறிக்கையை பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளியிட்டு இருந்தார்.
அதாவது இவ்வளவு நாட்களாக தனது குழந்தைகளுக்காக பொறுத்துக் கொண்டிருந்தேன். பல அவமானங்களை சந்தித்தேன். பத்திரிக்கையாளர்களே தற்போதும் நான் ஆர்த்தி ரவி தான். ஒரு தாயாக போராடிக் கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இதை அடுத்து நான்கு பக்கத்திற்கு ரவி மோகன் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அதாவது தன்னை ஒரு தங்க முட்டையிடும் வாத்தாக தான் பார்த்தார். அவர்களது ஆடம்பர வாழ்க்கைக்காக தன்னுடைய சொத்தை இழந்தேன்.
ஆர்த்தியின் அறிக்கைக்கு ரவி மோகனின் பதிலடி

காதல் என்ற பெயரில் தன்னுடைய பணம், சொத்து என அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள். என் குழந்தைகளை பார்க்கவே அனுமதிக்கவில்லை. அவர்கள் கார் ஆக்சிடெண்டில் சிக்கிய விஷயமே வேறு ஒருவர் சொல்லி தான் எனக்குத் தெரியும்.
இன்சூரன்ஸ்க்கு தன்னுடைய கையெழுத்து வேண்டும் என்பதால் தெரியப்படுத்தினார்கள். மேலும் என்னுடைய முன்னாள் மனைவியை தான் நான் பிரிய நினைக்கிறேன். என்னுடைய குழந்தைகளை அல்ல. அவர்கள் தான் என்னுடைய பெருமை, மகிழ்ச்சி.
அவர்களுக்காக நான் அனைத்துமே செய்வேன் என்ற ரவி மோகன் பதிவிட்டு இருக்கிறார். நான் இப்போதும் ஆர்த்தி ரவி தான் என்று ஆர்த்தி கூறி வந்த நிலையில் ரவியே தனது அறிக்கையில் முன்னாள் மனைவி என்ற பதிவிட்டு இருக்கிறார்.