பாக்யாவுக்கு உதவிய மாமனார், நிலாவுக்கு சப்போர்ட்டாக நடேசன்.. சூடு பிடிக்கும் அய்யனார் துணை

Vijay Tv Serial: பாக்கியலட்சுமி சீரியல் கிட்டத்தட்ட 1000 எபிசோடுக்கு மேல் தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்து அனைவரும் பார்க்கப்பட்ட ஒரு கதையாக இருந்தது.

இதற்கு முக்கிய காரணம் எதார்த்தமான கதைகளும் கஷ்டப்படும் மருமகளுக்கு சப்போர்ட்டாக நின்ன மாமனாரின் நடிப்பும் நன்றாக இருந்ததால் தொடர்ந்து மக்கள் ஆதரவு கொடுத்து வந்தார்கள்.

அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கேரக்டரில் தாத்தாவாக நடித்து வந்த பாக்யாவின் மாமனார் இறப்பிற்கு பின் கதை எதுவும் மக்களை கவராமல் தடம் புரண்டு விட்டது. அந்த வகையில் அரச்ச மாவை அரைத்துக் கொண்டு கதையை இழுத்து அடித்து வருகிறார்கள்.

எப்படி பாக்யாவிற்கு ராமமூர்த்தி மாமனார் கேரக்டரில் உதவி பண்ணினாரோ, அதே மாதிரி தற்போது அய்யனார் துணை சீரியலிலும் நிலாவிற்கு மாமனாராக நடேசன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இவருடைய எதார்த்தமான நடிப்பு இந்த நாடகத்திலும் செட் ஆகிவிட்டது.

அந்த வகையில் கொஞ்சம் ரவுடித்தனமாக இருந்த நடேசன் தற்போது நிலாவின் கல்யாண விஷயத்தை தெரிந்து கொண்ட பிறகு பொறுப்பானவராக மாறி கொண்டு வருகிறார். அதாவது நிலா சர்டிபிகேட் விஷயமாக படித்த காலேஜுக்கு போவதற்கு தயாராகிவிட்டார்.

அப்படி நிலா தனியாக போகும் பொழுது நடேசன் அதே காரில் ஏறிக்கொண்டு நானும் கூட வருவேன் என்று சொல்லி நிலா காலேஜுக்கு போகிறார். அங்கே போனதும் நிலாவிடம் ஏதாவது பிரச்சனையா என்றால் என்னிடம் சொல்லு என்று அனுப்பி வைக்கிறார்.

அதன்படி நிலா காலேஜுக்குள் சென்று தொலைஞ்சு போன என் சர்டிபிகேட்டை மறுபடியும் வாங்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன் என அங்கு இருப்பவர்களிடம் சொல்கிறார். அங்கே இருந்த நபர் இந்த தகவலை நிலாவின் அண்ணனுக்கு போன் பண்ணி சொல்கிறார்.

உடனே நிலாவின் அண்ணன் சர்டிபிகேட் எதுவும் கொடுக்க வேண்டாம். நான் கிளம்பி வருகிறேன் என்று காலேஜுக்கு வருகிறார். வந்ததும் வழக்கம் போல் நிலாவிடம் பிரச்சினை பண்ணி எப்படியாவது வீட்டிற்கு கூட்டிட்டு போகலாம் என வம்பு பண்ணப்போகிறார்.

அப்பொழுது நடேசன், நிலாவை காப்பாற்றும் விதமாக களத்தில் இறங்கி சம்பவத்தை செய்யப் போகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தான் தற்போது சூடு பிடித்து மக்களை கவர்ந்து வருகிறது.