நடிப்பு அசுரன் ரகுவரன்.. கடந்து வந்த பாதை

Raghuvaran : ரகுவரன் தன்னுடைய மிரட்டலான நடிப்பின் மூலம் இப்போதும் ரசிகர்களின் மனதில் ஒரு நீங்காத இடத்தில் இருக்கிறார். அவர் கடந்து வந்த பாதையை இந்த பதிவில் பார்க்கலாம்.

எம்ஜிஆர் கவர்மெண்ட் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புக்காக டிப்ளமோ முடித்துவிட்டு தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காக அலைந்தவர் தான் ரகுவரன். அவ்வாறு ஏழாவது மனிதன் படத்தின் மூலம் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தது.

ஆனாலும் அந்த படம் பெரிதாக போகாத நிலையில் வில்லனாக களம் இறங்கினார். அவ்வாறு சில்க் சில்க் சில்க் என்ற படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்த ரகுவரனுக்கு வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ரஜினிக்கு வில்லனாக மிஸ்டர் பரத் படத்தில் நடித்திருந்தார்.

இதை அடுத்து மந்திர புன்னகை, பூவிழி வாசலிலே, மனிதன் எனத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இவ்வாறு வில்லனாக கொடி கட்டி பறந்தாலும் ஒருபுறம் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பட்டயை கிளப்பினார்.

நடிகர் ரகுவரன் கடந்து வந்த பாதை

அவ்வாறு விசு இயக்கத்தில் வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தில் ரகுவரன் அசதி இருந்தார். மீண்டும் ஹீரோவாக இறங்கி ரகுவரன் ஜெயித்துக் காட்டிய படம் தான் அஞ்சலி. அதேபோல் புரியாத புதிர், காதலன் படங்கள் வில்லனுக்கு அடையாளமாக அமைந்தது.

இதை அடுத்து ரகுவரனுக்கு மாஸ்டர் பீஸ்ஸாக அமைந்த படம் மார்க் ஆண்டனி. ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் மிரட்டி இருப்பார். மார்க் ஆண்டனியை தொடர்ந்து அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த கேரக்டர் அரங்கநாதன்.

அதேபோல் சச்சின், திருமலை, சிவாஜி, யாரடி நீ மோகினி போன்ற படங்களில் அசத்தியிருப்பார். சினிமாவில் ஜெயித்தவர் 1996 ஆம் ஆண்டு ரோகினி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரிஷி என்ற மகன் உள்ள நிலையில் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

குடி பழக்கத்திற்கு அடிமையான இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு மறைந்தார். இன்னும் சில காலம் உயிருடன் இருந்தால் பல மறக்க முடியாத கதாபாத்திரங்களை கொடுத்திருப்பார்.