எல்லாம் சரிதான் ஆனா தமிழ்ல சொல்லி இருக்கலாம்.. அதுவும் இங்கிலீஷ்ல இவ்வளவு பெரிய அறிக்கையா, வைரல் மீம்ஸ்

Memes: ரவி மோகன் ஆர்த்தி குடும்ப விவகாரம் இப்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த விவகாரம் தான்.

ஆனால் ரவி தன் தோழியுடன் திருமண விழாவுக்கு வந்தது ஆர்த்தியை கடுப்பாக்கி விட்டது. நீ மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்பது போல் பெரும் குற்றச்சாட்டுகளை வைத்து அறிக்கை வெளியிட்டார்.

உடனே எல்லோரும் ரவியை திட்டி தீர்க்க ஆரம்பித்து விட்டார்கள். தற்போது அவர் தன் வாழ்க்கை பற்றிய நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் தனக்கு நடந்த பல துரோகங்களை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். அதே போல் பெண்களால் ஆண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் இவ்வளவா என வியக்கும் வகையில் பல விஷயங்களை சொல்லி இருந்தார்.

அதுதான் இப்போது ஊர்வாய்க்கு அவளாக மாறி இருக்கிறது. நெட்டிசன்களும் இதை இப்போது மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர்.

என்ன இருந்தாலும் தமிழ்ல அறிக்கை விட்டு இருக்கலாம். அதுவும் இங்கிலீஷ்ல இவ்வளவு பெருசாவா என ஒரு சிலர் ஒன்னும் புரியாமல் புலம்புகின்றனர். இன்னும் சிலர் பிக் பாஸ் புரணி பேசுற கூட்டம் தான் இப்ப இந்த குடும்ப விஷயத்தையும் பேசுது.

ஐசரி கணேஷ் பொண்ணு திருமண போட்டோவ பார்த்ததை விட ரவி தோழியோட வந்த போட்டோவை பாத்தவங்க தான் அதிகம் என பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.