குமரவேலுக்கு மீனா ராஜி மூலம் சூனியம் வைக்க போகும் அரசி.. சம்பவம் செய்யும் பாண்டியனின் வாரிசுகள்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசியின் கல்யாண வேலைகள் அனைத்தும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதில் அனைவருக்கும் புடவை எடுத்துவிட்டு அரசிக்கும் முகூர்த்த புடவையை எடுப்பதற்காக கடைக்கு போயிட்டு வீட்டுக்கு வருகிறார்கள். அப்பொழுது அரசியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக செந்தில் மற்றும் கதிர் பாசத்துடன் பேசி வருகிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக சதீஷ் நல்லவர், நமக்கு இவர் தான் கரெக்ட் என்று அரசி மனசுக்கும் தோன்றி விட்டது. அதனால் வீட்டுக்கு வந்ததும் சதீஷை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் சதீஷ் நாம் இருவரும் பேசுவோமா கால் பண்ணட்டுமா என மெசேஜ் பண்ணுகிறார். உடனே அரசியும் சரி என்று சொல்லும் பொழுது அங்கே சுகன்யா வந்து விடுகிறார்.

அப்பொழுது குமரவேல் பற்றி தான் ஏதாவது சொல்வார் என்று அரசி நீங்கள் எதுவும் அவனைப் பற்றி பேச வேண்டாம் என்று உதாசீனப்படுத்துகிறார். ஆனால் சுகன்யா நான் சொல்வதை காது கொடுத்து கேட்கவில்லை என்றால் இதையாவது பாரு என்று போனில் இருக்கும் புகைப்படத்தை காட்டுகிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்ததும் அரசி அதிர்ச்சியாகிவிட்டார். நான் இந்த மாதிரி நெருக்கமாக போட்டோ எடுத்துக் கொள்ளவே இல்லை. இதெல்லாம் பொய் என்று சொல்கிறார், ஆனால் சுகன்யா அரசி மனசை குழப்பும் விதமாக நல்லா ஏத்திவிட்டு பேசுகிறார்.

அத்துடன் குமரவேலு போன் பண்ணி என்னைய தவிர வேற யாரையாவது கல்யாணம் பண்ண தயாராகி விட்டால் இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவிலும் எல்லா போஸ்டர்லையும் ஒட்டி உன்னை டேமேஜ் பண்ணி விடுவேன் என்று பிளாக்மெயில் பண்ண ஆரம்பித்து விட்டார். இதனால் பயந்து போன அரசி என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு ராஜி வந்து அரசி முகத்தை பார்த்ததும் ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். ஆனால் சுகன்யா எதுவும் சொல்ல விடாமல் தடுத்து விடுகிறார். பிறகு அரசி யோசித்த நிலையில் இந்த விஷயத்தை மறைப்பது சரியாக இருக்காது. நாம் அப்பாவிடமும் அண்ணனிடமும் சொல்லலாம் என்று வீட்டிற்குள் போகிறார்.

ஆனால் அங்கே பாண்டியன் டென்ஷனாக கல்யாண வேலையை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து அரசி சொல்லாமல் மறைத்து விடுகிறார். அந்த வகையில் குமரவேலு செய்த அட்டகாசங்கள் அனைத்தும் மீனா மற்றும் ராஜிக்கு தெரிய வரப்போகிறது. இவர்கள் இருவருமே சேர்ந்து குமரவேலுக்கு ஆப்பு வைக்க போகிறார்கள்.

அதிலும் மீனாவுக்கு இப்போ தோசை கல்லு எல்லாம் இல்ல, அம்மிக்கல்லு தான் நேரடியாக குமரவேலு மண்டையில் போட்டு விடுவார். மேலும் கதிர் மற்றும் செந்திலுக்கும் இந்த விஷயம் தெரிந்த நிலையில் எல்லோரும் சேர்ந்து குமரவேலுவை கும்மி அடிக்கப் போகிறார்கள். ஆக மொத்தத்தில் குமரவேலு ரொம்ப கெட்டவன் என்று அரசிக்கு தெரிந்து விட்டது. அதனால் பாண்டியன் பார்த்த மாப்பிள்ளையுடன் அரசி கல்யாணம் நல்லபடியாக நடந்து விடும்.