Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா அந்த வீட்டில் இருப்பதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் அடுத்து ஒவ்வொரு விஷயத்தையும் மாற்ற வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். அதில் முதலில் செய்யப்போவது சேரனுக்கு நல்லபடியாக கல்யாணம் பண்ணி ஒரு பெண்ணை வீட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்றுதான்.
இந்த விஷயத்தை நிலா, பாண்டியன் சோழன் மற்றும் பல்லவனிடம் சொல்கிறார். அவர்களும் நாங்கள் தேடி பார்த்து விட்டோம், ஆனால் பொண்ணு எதுவும் கிடைக்க மாட்டேங்குது என்று சொல்கிறார்கள். உடனே நிலா, மேட்ரிமோனி மூலமாக பொண்ணு தேடலாம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லி அப்டேட் பண்ணுகிறார்.
அதன்படி எல்லா அப்டேட்டையும் முடித்துவிட்டு சேரன் வந்த நிலையில் உங்களுக்கு வரப் போகிற பொண்ணு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த வகையில் சேரன் மனதில் இருக்கும் ஆசை அனைத்தையும் ஒவ்வொன்றாக சொல்லி பொண்ணு தேடுவதற்கு தயாராகி விட்டார்.
இதனை அடுத்து நிலா அந்த வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும் பொழுது சோழன் இப்படியே இருந்தால் உங்கள் லட்சியத்தை எப்படி நிறைவேற்ற முடியும் என்று கேட்கிறார். அதற்கு நிலா, நான் அதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நாளைக்கு நான் சர்டிபிகேட் வாங்குவதற்கு திருவண்ணாமலை போகிறேன் என்று சொல்கிறார்.
உடனே சோழன் நானும் கூட வருகிறேன் என்று சொல்லிய நிலையில், நீங்க ஒன்னும் என்னுடன் வர தேவையில்லை. எனக்கான வேலையை நானே பார்த்துக் கொள்வேன் என்று சொல்கிறார். உடனே சோழன் என்ன திமிரு உங்களுக்கு என்று மனசுக்குள் சொல்லியதே நிலா கேட்டு விடுகிறார். ஆமா நான் திமிரான பொண்ணு தான் அப்படித்தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.
பிறகு அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது சோழன், நிலா தனியாக திருவண்ணாமலைக்கு போகிற விஷயத்தை பற்றி சொல்கிறார். அதற்கு சேரன் தனியாக போக வேண்டாம் நான் கூட வருகிறேன் என்று சொல்கிறார். உடனே நிலா, என்னை தனியாக போக அனுமதி கொடுங்கள். என்னுடைய வீட்டிலேயும் என் அப்பா இப்படித்தான் எங்கேயும் போக விடாமல் வீட்டுக்குள்ளே அடக்கி வைத்து விட்டார்.
அதனால் எனக்கு பல விஷயங்கள் தெரியாமல் போய்விட்டது, இங்கேயும் அப்படியே பண்ணாதீங்க என்று சொல்லியதும் சேரன் ஓகே தனியா போயிட்டு வாங்க என்று சொல்லிவிடுகிறார். உடனே சோழன் மற்றும் நிலா இருவரும் முறைத்துக் கொண்டு டாம் அண்ட் ஜெர்ரி ஆக சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனாலும் நிலா தனியாக போகக்கூடாது என்பதற்காக நடேசன் பாதிலேயே காரை மறைத்து ஏறிக்கொண்டு நிலாவுடன் காலேஜுக்கு போகிறார். அப்படி சர்டிபிகேட் வாங்குவதற்கு காத்துக் கொண்டிருக்கும் நிலாவிற்கு சர்டிபிகேட் கிடைக்காமல் ஏமாறப் போகிறார்.
ஏனென்றால் நிலாவின் அண்ணன் வந்து பிரச்சினை பண்ண போகிறார், அப்பொழுது நடேசன் தான் களத்தில் இறங்கி நிலாவை காப்பாற்றி வீட்டிற்கு கூட்டிட்டு வருவார்.