Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலாவிடம் பசுபதி பத்திரிகையாளர்களின் முன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி செண்டிமெண்டாக பேசி விஜய்யை கல்யாணம் பண்ணுவதற்கு ஐடியா கொடுக்கிறார். வெண்ணிலாவும் பசுபதி பேச்சை கேட்டு விஜய் மற்றும் காவிரி வாழ்க்கையில் குழப்பம் பண்ணுவதற்கு தயாராகிவிட்டார்.
அடுத்ததாக காவிரியை சந்தித்து பேசிய நவீன், விஜயை பார்த்து பேசுகிறார். அந்த வகையில் வெண்ணிலா பண்ணும் குழப்பத்திற்கு நீங்களும் காவிரியும் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது தான் காவிரியை பார்த்து பேசிட்டு வந்தேன், அவள் உங்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்து பொறுமையாக காத்துக் கொண்டிருக்கிறாள்.
நான் ஏதாவது உங்களுக்கு உதவி பண்ண வேண்டும் என்றால் சொல்லுங்கள் என்னால் முடிந்த எல்லா உதவியும் செய்கிறேன் என்று நவீன், விஜய்யிடம் சொல்கிறார். இதை கேட்ட விஜய் நன்றி சொல்லிய நிலையில் வெண்ணிலா சுயரூபம் இப்பொழுதுதான் எனக்கு புரிந்தது. ஆரம்பத்தில் காவிரியை தவறாக புரிந்து கொண்டு வெண்ணிலாவை முழுமையாக நம்பினேன்.
ஆனால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று இப்பொழுது தான் எனக்கு புரிந்திருக்கிறது. காவிரி யார் மனசையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற விஷயத்தில் பொறுமையாக இருந்து வெண்ணிலவை எப்படியாவது சமாதானப்படுத்தி வேறு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டு வாங்கள் நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
அந்த வகையில் இப்பொழுது வரை வெண்ணிலாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படுத்த வேண்டும் என்று தான் நான் நினைத்திருக்கிறேன். ஆனால் அந்த வெண்ணிலா பசுபதி உடன் சேர்ந்து கொண்டு என்னையும் காவிரியும் ரொம்பவே டார்ச்சர் பண்ணி வருகிறார். இதற்கு எல்லாம் நானே முடிவு கட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு போய்விடுகிறார்.
அங்கே போனதும் வெண்ணிலா வீட்டுக்குள் வரும் பொழுது தாத்தா பாட்டி வர வேண்டாம் என்று சொல்லித் தடுக்கிறார்கள். அப்பொழுது வெண்ணிலாவும் வாக்குவாதம் பண்ண ஆரம்பித்த நிலையில் விஜய் நீ எல்லாம் ஒரு மனுஷியா, உன்ன போய் நான் காதலிச்சது நினைச்சா அசிங்கமாக இருக்கிறது. நல்லவேளை உனக்கும் எனக்கும் அப்படி ஒரு கல்யாணம் நடக்கவில்லை. இன்னையோட உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தலைமுழுகி விட்டார்.
இதை கேட்டதும் வெண்ணிலா, பணத்துக்காக வந்தவளுக்காக என்னை இப்படி அவமானப்படுத்தி பேசுறீங்க. இதை நான் சும்மா விட மாட்டேன் நாளைக்கு நிச்சயம் உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும். இந்த வீட்டு மருமகளாக நான் வருவேன் என்று சவால் விட்டு போகிறார். இதற்கிடையில் பசுபதி போட்ட சூழ்ச்சியில் அஜய் அப்பா மற்றும் விஜய் ஜெயிலுக்கு போகக்கூடிய சூழ்நிலை வரப்போகிறது.