Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மாட்டிக்கொண்ட விஷயத்தை அவருடைய நண்பர்களிடம் சொல்கிறார். அவர்கள் குடித்துவிட்டு முத்துவையும் குடிக்க வைத்துவிட்டு டிராபிக் போலீஸ் அருண் வீட்டிற்கு சென்று பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் சான்ஸ் என்று டிராபிக் போலீஸ் அருண், முத்துவும் நண்பர்களும் சேர்ந்து பிரச்சனை பண்ணுவதை வீடியோ எடுத்து விடுகிறார்.
இதனை பார்த்த மீனாவின் தம்பி சத்யா, மீனாவுக்கு போன் பண்ணி தகவலை சொல்கிறார். உடனே மீனா, முத்துவுக்கு போன் பண்ணி வீட்டுக்கு வர வைக்கிறார். அப்படி முத்து வந்ததும் மீனா ஆறுதல் சொல்லி சாப்பிட வைத்து தூங்க வைக்கிறார். அடுத்ததாக முத்து வேலைக்கு போக முடியாத சூழ்நிலையில் இருப்பதால் வீட்டு வேலையை பார்க்கும் படி கிளீன் பண்ணுகிறார்.
இதனை பார்த்து விஜயா, முத்துவை மட்டம் தட்டி வாய்க்கு வந்தபடி அவமானப்படுத்துகிறார். உடனே மீனா, கோபத்தில் கொந்தளித்து முத்துவை சமாதானம் செய்துவிட்டு போலீஸ் வீட்டில் பேசிட்டு வருகிறேன் என்று சொல்லி போய் விடுகிறார். அங்கே போனதும் ஏற்கனவே முத்து அருண் வீட்டில் பிரச்சனை பண்ணிய வீடியோ எல்லாம் பார்த்து உதவி பண்ண முடியாத சூழ்நிலை போய்விட்டது.
பிறகு முத்துவுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக கேஸ் பைல் பண்ணி கோர்ட்டுக்கு கூட்டிட்டு போகும் போது மீனா அங்கே இருக்கும் கான்ஸ்டபிள் இடம் கெஞ்சுகிறார். உங்களுக்கு தெரியும் முத்துவின் காரு பிரேக் ஒயர் பிடிக்கவில்லை என்று. என்னை உங்களுடைய மகளாக நினைத்து பாருங்க. தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டதால் அந்த கான்ஸ்டபிள் போலீஸிடம் உண்மையை சொல்ல வருகிறார்.
ஆனால் அருண் வேண்டாம் என்று மறைமுகமாக சைகை காட்டியதால் கான்ஸ்டபிள் சொல்லவா வேண்டாமா என்று யோசனையுடன் இருக்கிறார். ஆனால் மீனா கெஞ்சி கேட்டதால் கான்ஸ்டபிள் நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறார். இதனால் முத்து பிரச்சனையிலிருந்து வெளியே வந்து விடுகிறார். ஆனால் டிராபிக் போலீஸ் அருண் மாட்டிக்கொண்டார்.
ஏனென்றால் உண்மையிலேயே முத்துவின் கார் பிரேக் ஒயர் பிடிக்கவில்லை என்று அருணுக்கு தெரிந்தும் பழிவாங்கும் எண்ணத்துடன் முத்துவை மாட்டி விட்டதால் அருணுக்கு பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. அடுத்ததாக லோக்கல் ரவுடி சிட்டி, ரோகினிடம் ஒரு செயினை கொடுத்து அதற்கு பதிலாக பணத்தை கேட்கிறார். ரோகிணியும் சரி என்று சொல்லி அந்த செயினை வாங்கிட்டு போய் விடுகிறார். ஆனால் அந்த செயின் திருட்டு செயின் என்பதால் நிச்சயம் இதன் மூலம் ரோகிணிக்கு ஒரு பிரச்சனை வரப்போகிறது.