Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி குமரவேலுவை நம்பியதால் தற்போது ஒவ்வொரு நொடியும் ரண வேதனையை அனுபவித்து வருகிறார். வீட்டில் பார்த்த மாப்பிள்ளை தான் நமக்கு சரிப்பட்டு வருவார் என்று தெரிந்து கொண்ட அரசி, சதிசை கல்யாணம் பண்ணுவதற்கு முழு மனதுடன் தயாராகி விட்டார்.
ஆனால் குமரவேலு, அரசி கழுத்தில் தாலி கட்டி பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று நினைத்ததால் அரசி மற்றும் குமரவேலுவின் போட்டோவை எடிட் பண்ணி நெருக்கமாக இருக்கும் படி நிறைய போட்டோக்களை ரெடி பண்ணி விட்டார். அதை அரசி பார்த்ததிலிருந்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவித்தார்.
பிறகு அப்பா அம்மாவிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்த நிலையில் பாண்டியன் கல்யாண வேலையில் டென்ஷன் ஆக இருப்பதை பார்த்து சொல்லாமல் போய்விடுகிறார். அடுத்து செந்தில் மற்றும் கதிர், அரசின் கல்யாணத்தைப் பற்றியும் பாசமான தங்கை நம்ம விட்டுப் போகிறார் என்று பீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைக் கேட்டுக் கொண்டு வாசலில் நின்ற அரசியை எதிர்த்து வீட்டில் நின்ற குமார், ஒழுங்கு மரியாதையா என்னுடன் கல்யாணம் பண்ணிக்கோ. இல்லை என்றால் இந்த போட்டோவை ஊர் முழுக்க ஒட்டி உன்னை அசிங்கப்படுத்தி, குடும்பத்தையும் அவமானப்படுத்தி விடுவேன் என்று சைகையால் மிரட்டுகிறார்.
இதனால் அரசி பயப்பட ஆரம்பித்து விட்டார். பிறகு வாசலில் நின்ற கதிர் மற்றும் செந்தில் அரசியின் பயத்தை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்கிறார். கோமதி வந்து அரசிடம் பேசி கல்யாண பயம் தான். வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லி அரசியை உள்ள கூட்டிட்டு போய் விடுகிறார்.
ஆனால் அப்படி போன போது அரசி பயத்தில் அழ ஆரம்பித்து விடுகிறார். உடனே கோமதி என்ன ஆச்சு என்று கேட்ட நிலையில் இன்னும் இரண்டு நாள் கல்யாணம் உங்களை எல்லாம் விட்டுட்டு போறது நினைச்சு ரொம்பவே வருத்தமாக இருக்கிறது என சொல்கிறார்.
அதற்கு கோமதி ஆறுதல் படுத்திய நிலையில் அரசியை தூங்க வைத்து விடுகிறார். குமரவேலு மிரட்டியதால் என்ன பண்ணுவது என்று தெரியாமலும் யாரிடம் சொன்னால் பிரச்சனை சரியாகும் என்று தெரியாமலும் முழித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அரசின் பயம் என்னவென்று தெரியாமல் மொத்த குடும்பமும் கல்யாணத்தால் பயம் என்று நம்பி ஏமாறுகிறார்கள்.
இருந்தாலும் இந்த விஷயம் எல்லாம் மீனா மற்றும் ராஜி காதுக்கு வரப்போகிறது. இவர்கள்தான் குமரவேலுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்கள். இதற்கு இடையில் குமரவேலு ஒரு பக்கம் டார்ச்சர் பண்ணுகிறார் என்றால் வீட்டிற்குள் இருந்து கொண்டு அரிசி வாழ்க்கையை கும்மி அடிக்க சுகன்யா கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். பாவம் இவர்கள் இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அரசி ஒவ்வொரு நொடியும் பயத்தால் அவஸ்தைப்படுகிறார்.