கயல் சீரியலில் தீபிகா போட்ட பிளானை உடைக்கும் கயல்.. தனம் திருந்த எழில் எடுக்கும் ரிஸ்க்

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், ஒரு பத்து லட்ச ரூபாயை வைத்து மாத்தி மாத்தி கயல் குடும்பம் விளையாடி வருகிறது. சிவசங்கரியிடம் போட்ட சவாலில் ஜெயிப்பதற்காக எழிலுக்கு ஒரு ட்ராவல்ஸ் பிசினஸை வைத்துக் கொடுக்க வேண்டும் என்று கயல் ஆசைப்பட்டார். அதன்படி 10 லட்ச ரூபாய் பணத்தை ஏற்பாடு பண்ணி ட்ராவல்ஸ் பிசினஸ் பண்ணுவதற்கு பிளான் பண்ணிவிட்டார்கள்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிவசங்கரி இதை கெடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். ஏனென்றால் கயல் இந்த பிசினஸை ஆரம்பித்து விட்டால் நிச்சயம் எழில் அதை வெற்றிகரமாக கொண்டு வந்து விடுவார். பிறகு நம்மிடம் விட்ட சவாலில் ஜெயித்து விட்டால் எழில் நிச்சயம் நம் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டான் என்று தீபிகாவுடன் சிவசங்கரி கூட்டணி வைத்து இதை கெடுப்பதற்கு முயற்சி எடுக்கிறார்கள்.

ஆனால் இதற்கிடையில் இந்த 10 லட்ச ரூபாய் நம்மிடம் இருந்தால் மூர்த்தி நினைத்த மாதிரி ஒரு ஹோட்டல் பிசினஸை வைக்கலாம் என்று கயலின் அண்ணி தனம் ஆசைப்பட்டார். அதனால் வீட்டில் சண்டை போட்டு தனம் அந்த பணத்தை கேட்டார். உடனே கயலும் சரி என்று அந்த பணத்தை ஹோட்டல் பிசினஸ்க்கு கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.

அதற்கான கடைகள் எல்லாத்தையும் பார்த்து நடத்தலாம் என்று முடிவு பண்ணி பணத்தை வீட்டில் வைத்து விட்டார்கள். ஆனால் இது எதுவும் தெரியாத சிவசங்கரி மற்றும் தீபிகா அந்த பணத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்கள். அந்த வகையில் தீபிகா போட்ட பிளான் என்னவென்றால் கயலுடன் வந்திருக்கும் அணுவை யாருக்கும் தெரியாமல் கடத்திட்டு வந்து பிளாக் மெயில் பண்ணி பணத்தை வாங்கலாம் என்று சூழ்ச்சி பண்ணிட்டார்.

அதன்படி அணு கடத்தப்பட்ட நிலையில், கயல் சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் சிசிடி கேமரா மூலம் பார்த்து விடுகிறார். அந்த வகையில் இப்போதைக்கு அணு நல்லபடியாக வீட்டிற்கு வரவேண்டும் என்பதால் எழிலுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லி வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்துட்டு வர சொல்லிவிட்டார். எழிலும் அந்த பணத்தை எடுத்துட்டு கிளம்பும்போது அண்ணி அதை பார்த்து விடுகிறார்.

அண்ணிக்கு விஷயம் எதுவும் தெரியாததால் எழில் பணத்தை எடுத்துட்டு போவதை பார்த்து பிரச்சனை பண்ண ஆரம்பிக்கிறார். ஆனால் எழில் காரணம் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலையால் பணத்தை எடுத்துட்டு போய் விடுகிறார். ஆனால் நிச்சயம் பணத்தை அந்த ரவுடிகளிடம் கொடுக்காமல் அணுவையும் காப்பாற்றி பிரச்சனையை இல்லாமல் எழில் வீட்டிற்கு வந்து விடுவார்.

அதன் பிறகு தான் கயல் மற்றும் எழில் மூலம் அணு விஷயம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வரும். இதுவரை பணம் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டம் பண்ணிய தனம், அணுவை காப்பாற்றுவதற்காக தான் எழில் அந்த பணத்தை எடுத்துட்டு போனார் என்பதை புரிந்து கொண்டு திருந்தி விடுவார். கடைசியில் இந்த பிளானிலும் தீபிகா மற்றும் சிவசங்கரி தோற்றுப் போய் நிற்கப் போகிறார்கள்.