Sun Tv Serial: சீரியலுக்கு ராஜாவாக இருந்த சன் டிவி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் சீரியலுக்கு வரும் டிஆர்பி ரேட்டிங் படி எந்த சேனல்கள் அதிக சீரியல்களில் இடம் பிடித்திருக்கிறது என்பதை பார்த்து வருவோம். அப்படி சன் டிவி சீரியல் முதல் இடத்தை பெற்றிருந்தாலும் கம்மியான புள்ளிகளை மட்டுமே எடுத்து இருக்கிறது.
இதற்கு காரணம் எதார்த்தமான கதைகளை தாண்டி மக்கள் வைத்திருந்தை எதிர்பார்ப்பை விட்டுவிட்டு கதையை இஷ்டப்படி நகர்த்தி கொண்டு வருவதால் பார்ப்பவர்களுக்கு சீரியல் ஏமாற்றமாக அமைந்து வருகிறது. அப்படித்தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் முக்கால்வாசி இருக்கிறது.
முக்கியமாக டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சீரியல்களுக்கும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் கதையே இல்லாமல் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் இடம் பிடித்திருக்கிறது. அதாவது எப்போதுமே குடித்துவிட்டு வரும் சூர்யா, மாமியாரிடம் திட்டு வாங்கிக் கொண்டு அடிமையாக வாழும் நந்தினி.
இவர்களை நோக்கி தான் கதை நகர்ந்து வருகிறது, இப்படி திரும்பத் திரும்ப அதே காட்சிகளை வைத்து பார்ப்பவர்களுக்கு எரிச்சல் படுத்தும் விதமாக கதை இருக்கிறது. ஆனாலும் இரண்டாவது இடத்தில் இந்த சீரியல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஹீரோவாக நடிக்கும் சூர்யாவின் நடிப்பும் நந்தினியின் கெமிஸ்ட்ரியும் மக்களை கவர்ந்ததால் இவர்களுக்காகவே இந்த நாடகத்தை பார்த்து வருகிறார்கள்..
மத்தபடி கதையும் ஒன்றுமில்லை சுவாரசியமும் இல்லை. இதே மாதிரி தான் கயல் சிங்கப்பெண் சீரியலும் போர் அடிக்கும் வகையில் இருப்பதால் கம்மியான புள்ளிகளை பெற்றிருக்கிறது. இப்படியே போனால் சன் டிவி சீரியலை ஓவர் டேக் பண்ணும் விதமாக விஜய் டிவி ஜீ தமிழ் உள்ளே புகுந்து விடும்.