Ravi Mohan : ரவி மோகன் விவாகரத்து செய்தியில் இருந்து தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஐஸ்வர்யா தனுஷ், ஜிவி பிரகாஷ் சைந்தவி ஆகியோர்களின் விவாகரத்தில் இருவரும் முடிவெடுத்து பிரிந்துவிட்டனர்.
ஆனால் ரவி மோகன் விவாகரத்து வேறு மாதிரியான சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கெனிஷா உடன் ஜோடியாக ரவி மோகன் திருமணத்தில் கலந்து கொண்டது ஆர்த்தியின் கோபத்தை அதிகமாகியது.
இதனால் ரவி மோகன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து ஒரு அறிக்கை விட்டிருந்தார். இதை அடுத்து ரவி மோகன் ஆர்த்தியின் குடும்பத்திற்கு பொன்முட்டையிடும் வாத்தாக தான் இருந்ததாக கூறியிருக்கிறார். மேலும் அவர்களின் கடனுக்கு ஜாமீன் போடும் நபராக தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கூறினார்.
ரவி மோகன் பற்றி அறிக்கைவிட்ட சுஜாதா விஜயகுமார்
இதை அடுத்து ரவியின் மாமியாரும் திரைப்பட மற்றும் சின்னத்திரை தொடர்களின் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் ஒரு அறிக்கை விட்டிருந்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் பயணித்து வருகிறேன். சமீபகாலமாக என் மீது பல அவதூறு செய்திகள் பரவி வருகிறது.
இதைப் பற்றி தெளிவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். என்னை இப்போது குடும்பத்தை பிரித்தவள், கொடுமைக்காரி என ஏதேதோ பட்டம் வைத்து விமர்சித்து வருகிறார்கள். நான் ஜெயம் ரவியை 100 கோடி கடனுக்கு தள்ளப்பட்டதாக சொன்னது பொய்.
சின்னத்திரை தொடர்களை தயாரித்துக் கொண்டிருந்த என்னை படங்கள் தயாரிக்கச் சொன்னது ஜெயம் ரவி தான். அவருடைய அடங்கமறு படத்தை தயாரித்தேன். என்ன படம் வசூல் ரீதியாக நஷ்டத்தை சந்தித்தது. ஆனாலும் அவரை வைத்து மீண்டும் படங்களை தயாரித்தேன்.
இதனால் 100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தேன். அதோடு மட்டுமல்லாமல் படத்தில் 25 சதவீதம் சம்பளத்தையும் ஜெயம் ரவிக்கு கொடுத்திருக்கிறேன். அவரை ஒரு ரூபாய்க்கு நான் பொறுப்பேற்க சொன்னதாக ஆதாரத்தை வெளியிட சொல்லுங்கள்.
இப்போதும் என்னுடைய பேர குழந்தைகளுக்காக என் மருமகன் மற்றும் மகள் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். தன்னுடைய மகளை வாழாவெட்டியாக பார்க்கும் நிலை எந்த ஒரு தாய்க்கும் வரக்கூடாது. இப்போதும் ஜெயம் ரவியை தனது மகனாக பார்க்கிறேன் என்று சுஜாதா விஜயகுமார் அறிக்கை விட்டிருக்கிறார்.