விட்டுக் கொடுக்காத இளையராஜா.. பெரிய மனுஷனாக நடந்து கொண்ட தமன்

Ilayaraja : இளையராஜா மூன்று தலைமுறை ரசிகர்களையும் தனது இசையால் கட்டி போட்டு வருகிறார். இவ்வாறு இசையில் சக்கரவர்த்தியாக இருக்கும் இவர் தனது பாடல்கள் வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டு வருகிறார்.

அவ்வாறு தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. காப்புரிமை வாங்காமல் பயன்படுத்தப்பட்டதாக 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால் அந்தப் பாடல்களின் காப்புரிமை உள்ள நிறுவனத்திடம் அனுமதி வாங்கி விட்டதாக படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல் சமீபத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் மம்முட்டியான் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒலிக்கப்பட்டது.

இசையமைப்பாளர் தமன் செய்த விஷயம் பாராட்டப்படுகிறது

இந்த படத்திற்கு இசையமைத்த தமன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த பாடலை பயன்படுத்தியதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அந்தப் பதிவுதான் இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால் இளம் இசையமைப்பாளரான தமன் தனது பாடல் பயன்படுத்தியதை பெருமையாக நினைத்து உள்ளார். இதுவே இளையராஜாவாக இருந்தால் உடனே நஷ்ட ஈடு கேட்டு இருப்பார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஒரு சிலர் இந்த பாடல் பயன்படுத்தியதற்கு முதலில் காப்புரிமை பெற்று தமன் பணம் வாங்கி இருப்பார். இதனால் இளையராஜாவை பற்றி குறை கூற வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர்.