Shreyas Iyer: இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்கியிருக்கிறது. அதில் பெரும் சாதனையை படைத்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.
நேற்று நடைபெற்ற போட்டியில் இவருடைய பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்தது. அதன் பின் நடந்த போட்டியில் குஜராத் அணி டெல்லி அணியை தோற்கடித்தது.
இதனால் நேற்று பஞ்சாப் அணி, குஜராத் அணி, பெங்களுரு அணி ஆகியவை பிளே ஆஃப்க்கு முன்னேறியது. இதில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சாதனையை மூன்றாவது முறையாக செய்துள்ளார்.
IPL வரலாற்றில் சாதனை படைத்த ஷ்ரேயாஸ் ஐயர்
முன்னதாக டெல்லி அணியின் கேப்டனாக இருந்த போது 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் அந்த அணியை ப்ளே ஆஃப்புக்கு அழைத்துச் சென்றார்.
அடுத்தது 2024 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தபோது ப்ளே ஆஃப்புக்கு சென்றார். அதேபோல் அந்த அணிக்கு கப்பையும் வென்று கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து இப்போது பஞ்சாப் அணி பிளே ஆஃப்க்கு சென்றுள்ளது. இப்படியாக ஐபிஎல் வரலாற்றில் வெவ்வேறு 3 அணிகளை ப்ளே ஆப்க்கு கொண்டு சென்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
அதேபோல் இந்த வருடத்தின் வெற்றி கோப்பையை பஞ்சாப் அணிக்கு இவர் பெற்றுக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.