கோபியிடம் உதவி கேட்கும் பாக்கியா.. ஜெனி அமிர்தாவுக்கு இடையே ஏற்படும் விரிசல்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா ஒரு சின்ன ரெஸ்டாரண்டை ஓப்பன் பண்ணியதால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் மன வருத்தம் இருக்கிறது. ஆனால் ஈஸ்வரிக்கு பாக்கியா பண்ணும் வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் ஏதாவது சொல்லி திட்டிக் கொண்டே இருக்கிறார். இதனால் சமாளிக்க முடியாமல் பாக்யா தவிக்கிறார்.

அப்பொழுது பாக்யாவின் ஹோட்டலுக்கு கோபி சென்று சாப்பிடுகிறார். சாப்பிடும்பொழுது அக்கறையாக பாக்யாவிடம் பேசி என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளு. நான் உனக்காக பண்ணுகிறேன் என்று சொல்கிறார். உடனே பாக்கியா அப்படி என்றால் நீங்கள் எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா என்று கேட்கிறார். அதற்கு கோபி என்ன என்று சொல்லு என கேட்ட நிலையில் அத்தையே என்னால் சமாளிக்க முடியவில்லை.

அவர்களுக்கு நான் பிசினஸ் பண்ணுவது பிடிக்கவில்லை, அதனால் ஏதாவது ஒரு குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார். இதனால் வீட்டில் இருப்பவர்களிடமும் சின்ன விரிசல் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. இதெல்லாம் சமாளித்துவிட்டு அத்தையும் சமாளித்து ஹோட்டலையும் என்னால் பார்க்க முடியாது. அதனால் நீங்க தான் இந்த விஷயத்தில் எனக்கு உதவி பண்ண வேண்டும் என்று கேட்கிறார்.

உடனே கோபி நீ சொல்வது எனக்கு புரிகிறது நானும் என்னுடைய அம்மாவை வீட்டுக்கு வா என்று கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன். ஆனால் அவங்க தான் இங்கே பேரன் பிள்ளைகளுடன் இருப்பது தான் எனக்கு சந்தோசமாக இருக்கிறது என்று சொல்கிறார். இதனால் அவங்களை வற்புறுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் மாட்டிக் கொண்டேன் என சொல்கிறார்.

அதற்கு பாக்கியா, என்னுடைய வீட்டில் இருந்து அவங்களை கூட்டிட்டு போக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இனி என்னுடைய விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று நீங்கள் தான் அவங்களுக்கு புரிய வைக்கணும் என சொல்கிறார். உடனே கோபியும் சரி என்று சொல்லிவிட்டு ஈஸ்வரியை கூட்டிட்டு இனியா வீட்டுக்கு போகிறார். அங்கே ஈஸ்வரியை பார்த்ததும் சுதாகர் பாச ட்ராமாவை போட்டு விடுகிறார்.

அதை பார்த்ததும் ஈஸ்வரி, சுதாகர் போல ஒரு சம்பந்தம் கிடைக்குமா என்று கோபி இடம் சொல்லி பாக்கியவை திட்ட ஆரம்பித்து விடுகிறார். உடனே கோபி பாக்யாவிற்கு சப்போர்ட் பண்ணும் விதமாக ஈஸ்வரிடம் நீ இனி பாக்கிய விஷயத்தில் தலையிட வேண்டாம். பாக்யாவுக்கு எது நல்லது எது கெட்டது என்று தெரியும். அதனால் பாக்கியாவே எல்லாத்தையும் பார்த்திருப்பாள் என்று சொல்கிறார்.

அடுத்ததாக சமையல் பிரச்சினையில் அமிர்தா மற்றும் ஜெனிக்கு இடையே ஏற்படும் விரிசலை தடுப்பதற்காக பாக்கியா வீட்டில் சமைப்பதற்கு ஒரு வேலை ஆட்களை கூட்டிட்டு வருகிறார். அந்த நபரிடம் ஈஸ்வரி சண்டை போடும் விதமாக பேசி பாக்கியாவிடம் இதெல்லாம் செட் ஆகாது என்று திட்டி விடுகிறார். அத்துடன் யாரு வேலைக்காரிக்கு சம்பளம் கொடுப்பார் என்று கேள்வி கேட்டு புதுசாக ஒரு பிரச்சினையை ஆரம்பிக்கிறார்.

இதற்கிடையில் செல்வி அக்காவின் மகன் ஆகாஷ் பார்ட் டைம் ஆக வேலை வேண்டும் என்பதால் பாக்யாவின் ஹோட்டலிலேயே சேர்ந்து விடுகிறார். அப்பொழுது பாக்யாவின் ஹோட்டலுக்கு கவுன்சிலர் வந்து பிரச்சனை பண்ணுகிறார். இதை சமாளிக்கும் விதமாக பாக்கியா போலீஸ் இடம் கம்ப்ளைன்ட் கொடுப்பதற்கு தயாராகி விட்டார்.