Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலுவை பொறுத்தவரை அரசியை தவிர வேற யாரும் நம்மளை கல்யாணம் பண்ண மாட்டார்கள். நாமளும் அரசியை கல்யாணம் பண்ணி பாண்டியனை பழி வாங்கலாம் என்று நினைத்து தான் குமரவேலு, அரசியை காதலிப்பது போல் நடித்தார். அரசியும் குமரவேலுவை நம்பி காதலிக்க தொடங்கினார்.
ஆனால் வீட்டுக்கு தெரிந்த நிலையில் அரசி அமைதியாக இருக்கும் பட்சத்தில் குமரவேலு செய்த ரவுடித்தனத்தை அரசி புரிந்து கொண்டு குமரவேலு கெட்டவன் நாம்தான் ஏமாந்துட்டோம் என்று முடிவுக்கு வந்து விட்டார். அதனால் அப்பா சொன்னபடி சதீஷை கல்யாணம் பண்ணலாம் என்று எல்லா ஏற்பாடுக்கும் முழு மனதுடன் சம்மதத்தை தெரிவித்தார்.
ஆனால் இதெல்லாம் பார்த்த குமரவேலு இப்படியே விட்டு விட்டால் அரசி நமக்கு கிடைக்காமல் போய்விடுவார். பிறகு நாம் கடைசி வரை கல்யாணம் ஆகாமல் சன்னியாசி ஆகத்தான் இருக்க முடியும் என்று முடிவு பண்ணி அரசியை சூழ்ச்சியில் சிக்க வைக்க போட்டோவை தவறாக எடிட் பண்ணி விட்டார். அந்த போட்டோவை அரிசி பார்த்ததிலிருந்து குமரவேலு மிரட்டலுக்கு பயந்து போய் இருக்கிறார்.
இதனால் மீனாவுக்கு சந்தேகம் வந்த நிலையில் அரசிடம் உன் முகம் சரியில்லை என்னாச்சு, ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். அப்பொழுது மீனாவிடம் அரசி உண்மையை சொல்லி இருந்தால் இந்த பிரச்சனைக்கு மீனா ஒரு தீர்வு கண்டுபிடித்து இருப்பார். ஆனால் மீனா கேட்ட பொழுது அரசி அப்படி எல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை என்று பொய் சொல்லி சமாளித்து விட்டார்.
இதனால் வீட்டில் கல்யாண வேலைகள் எல்லாம் ஆரம்பித்த நிலையில் அரசி கையில் மெஹந்தி போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் குமரவேலு போன் பண்ணுகிறார். அதை கோமதி எடுத்த நிலையில் குமரவேலு அரசியின் தோழி மாதிரி பேசி அரசிடம் கொடுக்க சொல்கிறார். அப்படியே அரசி குமரவேலுவிடம் பேசும் பொழுது மிரட்டி பயத்தை ஏற்படுத்தி விட்டார்.
இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அரசி முழித்துக் கொண்டிருக்கும் நிலையில் சுகன்யா குமரவேலுக்காக சதியில் கூட்டணி சேர்ந்து கொண்டார். அந்த வகையில் குமரவேலுவை தனியாக பார்த்து பேசி இந்த பிரச்சினையை எப்படியாவது முடித்துவிடு என்று அரசி மனசை மாற்றி தனியாக சுகன்யா அனுப்பி வைக்கிறார். உடனே குமரவேலு இது தான் சான்ஸ் என்று அரசியை கடத்திவிட்டார்.
இந்த பிரச்சனையிலிருந்து தங்கமயில் தான் அரசியை காப்பாற்றப் போகிறார். இதற்கிடையில் கல்யாணத்திற்கு போட வேண்டிய நகைகள் அனைத்தையும் கோமதி பேங்கில் இருந்து எடுத்து வந்து மீனா ராஜி மற்றும் தங்கமயிலுக்கு கொடுக்கிறார். உடனே தங்கமயில் பயப்பட ஆரம்பித்து விட்டார். ஏனென்றால் அது போலி நகை என்பதால் மீனா மற்றும் ராஜிக்கும் தெரியும். இதனால் மறுபடியும் பிரச்சினையாகி விடக்கூடாது என்று தங்கமயில் பயத்தில் இருக்கிறார்.
அடுத்ததாக ராஜி கல்யாணத்துக்கு புடவை எடுத்துட்டு வந்ததும் கதிருக்கும் அதே கலரில் சட்டை எடுத்து வந்து கொடுக்கிறார். ஆனால் எப்பொழுதுமே கதிர், ராஜி சொன்னதும் கேட்காமல் கொஞ்சம் சீண்டிப் பார்க்கும் விதமாக நீ எடுத்துட்டு வந்த கலர் எனக்கு பிடிக்கவில்லை நான் அதை போட மாட்டேன் என்று ராஜியிடம் வம்பு பண்ணுகிறார். ஆனால் சர்ப்ரைஸ் ஆக ராஜி எடுத்து வந்த சட்டையை போட்டுட்டு வந்து ராஜியை சந்தோஷப்படுத்துவார்.