Sun Tv Serial: என்னதான் காலங்கள் மாறினாலும் சில விஷயங்களை மறக்கவே முடியாது. ஓல்ட் இஸ் கோல்ட் என்று சொல்வதற்கு ஏற்ப சின்னத்திரையில் மறக்க முடியாத சீரியல்கள் பல இருக்கிறது. இதில் எப்பொழுதுமே மெட்டி ஒலி சீரியல் முதலிடத்தில் தான். குடும்பங்களுடன் சேர்ந்து கொண்டாடும் விதமாக கதை அம்சம், எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
அதனால் தான் கிட்டத்தட்ட மெட்டி ஒலி சீரியல் மூன்று வருடங்களாக ஓடி ஹிட் சீரியலாக மக்கள் மனதில் இடம் பிடித்தது. இப்படிப்பட்ட சீரியல் மறுபடியும் வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் வைத்ததற்கு ஏற்ப சமீப காலமாக மெட்டிஒலி 2 வரும் என்று சில தகவல்கள் கசிந்தது. ஆனால் வந்த தகவல் என்னமோ உண்மைதான். மெட்டிஒலி 2 எடுப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் இயக்குனர் செய்திருக்கிறார்.
ஆனால் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட சின்ன சின்ன சிக்கல்களால் மெட்டிஒலி 2 வேண்டாம் என்று இயக்குனர் திருமுருகன் முடிவு பண்ணி விட்டார். அந்த வகையில் சன் டிவியில் மறக்க முடியாத சீரியலாக இப்பொழுது வரை மக்கள் மனதில் இருக்கும் மெட்டிஒலி 2 இனி வருவதற்கு வாய்ப்பே இல்லை.
ஏற்கனவே சன் டிவியில் உள்ள சீரியல்கள் எல்லாம் தற்போது எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் துவண்டு போய் இருக்கிறது. இதையெல்லாம் தூக்கி நிறுத்தும் விதமாக மெட்டிஒலி 2 சீரியல் வந்தால் நிச்சயம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். சன் டிவி சீரியலும் விட்ட இடத்தை பிடித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரச்சினையை சரி செய்யாமல் இயக்குனர் சொன்னபடி சன் டிவி சேனலும் மெட்டி ஒலி 2வை ஒதுக்கி விட்டார்கள்.
இருந்தாலும் இயக்குனர் திருமுருகன் வேறொரு கதையுடன் புத்தம் புது சீரியலை கொண்டு வருவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதுவும் ஒரு விதத்தில் நல்லதுக்காக தான் இருக்கிறது, ஏனென்றால் மெட்டு ஒலி சீரியல் எந்த அளவுக்கு இப்பொழுது வரை பேசப்படுகிறதோ, அதே மாதிரி எதிர்நீச்சல் சீரியலும் இரண்டு வருடங்களுக்கு முன் பட்டி தொட்டி எல்லாம் பறந்தது.
ஆனால் இதன் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் பாகம் மொத்த பெயரையும் டேமேஜ் பண்ணும் விதமாக சீரியல் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு பேசாமல் பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என்பதற்கு ஏற்ப எதிர்நீச்சல் முதல் பாகத்துடனே விட்டு இருக்கலாம். ஏனென்றால் எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் சொதப்பிக்கொண்டு வருகிறது.