Mahanadhi Serial: பொதுவாக சின்னத்திரை சீரியல் மூலம் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ஆர்டிஸ்ட்கள் பலரும் மக்களிடம் வரவேற்பு பெற்று பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் காவேரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் லட்சுமி பிரியாவும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் மனதை வென்றிருக்கிறார்.
இதற்கு காரணம் காவிரிக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் என்கிற சுவாமிநாதன் ஸ்டைலாகவும் அழகாகவும் நடிப்பை வெளிப்படுத்தி கதாநாயகன் என்ற முத்திரையை பெற்றுவிட்டார். அதனால் விஜய் மற்றும் காவிரி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியதால் மக்கள் VIKA என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
இதற்கு ஏற்ற மாதிரி இயக்குனரும் இவர்கள் இருவரை வைத்து எந்த அளவுக்கு ரொமான்ஸ் கெமிஸ்ட்ரியை கொடுக்க முடியுமோ அதை கொடுத்து டிஆர்பி ரேட்டிங்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் காவிரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் லட்சுமி பிரியா விஜய் டிவியில் புதுசாக தொகுப்பாளனியாகவும் பயணிக்க ஆரம்பித்து விட்டார்.
அதாவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வந்தார்கள். ஆனால் பிரியங்கா கல்யாணம் முடிந்த கையுடன் கொஞ்சம் பிஸியாக இருப்பதால் அவ்வப்பொழுது வர முடியவில்லை. அதனால் மாகாபாவுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு லட்சுமி பிரியா வருகிறார். இதன் மூலம் லட்சுமி பிரியாவிற்கு வேறொரு வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் புதுசாக கிடைத்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமாக லட்சுமி பிரியா உடன் சேர்ந்து பொன்னி சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் சபரி என்பவரும் தொகுத்து வழங்குகிறார். இதனால் இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளிவந்ததை தொடர்ந்து இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து பேசி கல்யாணம் பண்ணப் போகிற ஜோடி என்றும் கமெண்ட்ஸ்கள் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சபரி, லட்சுமி பிரியா என்னுடைய தோழி நான் எப்படி ஒரு ஆண் தொகுப்பாளராக இருக்கிறேனோ, அதே மாதிரி லட்சுமி பிரியா பெண் தொகுப்பாளனி அவ்வளவுதான் என்று பதிவிட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் லட்சுமி பிரியாவுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்ததை ஒட்டி சிலர் நெகட்டிவ் கமெண்ட்ஸை கொடுத்து வருகிறார்.
ஏன் எல்லோரும் VIKA என்று லட்சுமி பிரியாவை தூக்கி கொண்டாடுகிறார்கள். அதற்கெல்லாம் தகுதியே இல்லை, அந்த அளவுக்கு சொல்ற மாதிரி நடிப்பும் இல்லை அழகும் இல்லை ஏன் சாதாரணமாக ஒரு சீரியலை பார்ப்பதை விட்டுவிட்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு அவர்களை பிரபலம் ஆக்கி விடுறீங்க என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக காவிரி என்கிற லட்சுமி பிரியா, உங்களுடைய மோசமான சிந்தனைக்கு யாரும் பதில் சொல்ல முடியாது.
உங்களுக்கு பார்க்க விருப்பம் இல்லை என்றால் உங்க வேலை மட்டும் பாருங்க. அதை விட்டுவிட்டு மற்றவர்களை இந்த மாதிரி கமெண்ட் அடிப்பது சரியில்லை. நான் அழகா இருக்கேனா நல்லா நடிக்கிறனா என்று யாரிடமும் கேட்டதில்லை. அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.