Vetrimaaran : வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் வடசென்னை 2 படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். முதன் முதலில் வெற்றிமாறன் தனுஷின் பொல்லாதவன் படத்தில் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.
இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இதில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் தான் வடசென்னை 2. இதனடையே வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாகிவிட்டார்.
தனுஷும் ஒருபுறம் அடுத்தடுத்த படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல படங்களை இயக்கி வந்தார். இப்போது மீண்டும் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி இணைவது உறுதியாகிவிட்டது.
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் புதிய படம்
அதாவது சமீபத்திய நேர்காணலில் வெற்றிமாறன் இதுகுறித்து பேசி இருக்கிறார். சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கு பிறகும் தனுஷின் படத்தை இயக்க உள்ளதாக கூறினார். மேலும் அந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
ஐசரி கணேஷ் தற்போது பல பெரிய படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் இந்த படமும் ஒரு பெரிய பட்ஜெட் படமாக அமைய இருக்கிறது. ஆனால் இது வடசென்னை 2 படமாக இருக்க வாய்ப்பில்லை.
ஏனென்றால் வடசென்னை படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். ஆகையால் இரண்டாம் பாகத்தை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுக்க கண்டிப்பாக சம்மதித்திருக்க மாட்டார். எனவே இது புதிய கதையில் வேறு ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.