கார்த்திகாவை நினைத்து பீல் பண்ணும் சேரன்.. சோழன் அப்பாவை கண்ட்ரோலுக்கு கொண்டு வந்த நிலா

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா இதுவரை சோழன் வீட்டில் இருந்தபொழுது நடேசன் செய்த விஷயங்கள் எதுவுமே பிடிக்காமல் இருந்தது. அத்துடன் நடேசன், பொண்டாட்டியை கொலை பண்ணி இருக்கிறார் என்ற விஷயம் கேள்விப்பட்டவுடன் இந்த வீட்டில் இருந்தால் நமக்கு சரியாக இருக்காது என்று நிலா தனியாக போகத் துணிந்தார்.

ஆனால் சேரன் பல்லவனுக்காக நிலா அந்த வீட்டில் இருக்கும்படி சூழ்நிலை அமைந்து விட்டது. இருந்தாலும் நடேசனை பார்க்கும் போதெல்லாம் நிலாவுக்கு பயமாகவே இருந்தது. அது எல்லாம் சரி செய்யும் விதமாக தற்போது நிலாவுடன் காலேஜுக்கு சென்று பாதுகாப்பாக கூட்டிட்டு வந்த நடேசன் மீது நிலாவுக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்து விட்டது.

அதனால் சோழன் வீட்டில் இருப்பதற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று நிம்மதியாகிவிட்டார். அந்த நேரத்தில் நிலாவின் அண்ணி கால் பண்ணி காலேஜில் நடந்த விஷயத்தை பற்றி கேட்கிறார். நிலா கோபத்துடன் அண்ணனை திட்டி இந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கால் தூசி கூட அங்கு இருப்பவர்களுக்கு மனசே இல்லை என்று நடசனுக்கும் சோழன் குடும்பத்தை பற்றியும் பெருமையாக பேசி விட்டார்.

அடுத்ததாக சேரனுக்கு மேட்ரிமோனியில் பதிந்து வைத்ததை தொடர்ந்து ஒரு வரன் வந்திருப்பதால் அந்த வீட்டில் பேச வேண்டும் என்று நிலா, சோழன் பல்லவன் பாண்டியனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை சமைத்துக் கொண்டிருக்கும் சேரன் கேட்டதும் கார்த்திகா நியாபகத்துடன் பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் சேரன் மனதிலும் கார்த்திகா தான் இருக்கிறார் என்று தெரிந்து விட்டது.

அதனால் நிலா என்னதான் வேற இடத்தில் பொண்ணு பார்த்தாலும் கடைசியில் சேரன் மற்றும் கார்த்திகா தான் ஒன்று சேரப் போகிறார்கள். இந்த கல்யாணத்தையும் நிலா தான் நடத்தி வைக்க போகிறார். அடுத்ததாக அடிபட்டு வந்திருக்கும் நடேசனுக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்று நிலா அலாரம் வச்சு சரியான நேரத்தில் மருந்து கொடுக்கிறார்.

ஆனால் நடேசன் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்லிய நிலையில் நிலா, நடேசனை அதட்டி மருந்து கொடுக்கிறார். இவ்வளவு நாள் ஓவராக துள்ளிக் கொண்டிருந்த நடேசன், நிலா அதட்டியதும் எதுவும் சொல்லாமல் மாத்திரையை வாங்கிக்கொண்டு சாப்பிட்டு விட்டார். இதுவும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்பதற்கு ஏற்ற மாதிரி நிலா அந்த வீட்டு பெண்ணாக மாறி அனைவரையும் அன்பாக கவனித்து வருகிறார்.