ரோகிணி விரித்த வலையில் சிக்கிய விஜயா.. சீதாவின் காதலுக்கு சங்கு ஊத போகும் மீனாவின் அம்மா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி மீது முத்துவுக்கு சந்தேகம் வந்த நிலையில் இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ரோகிணி, எல்லோரும் ஏன் என்னை கார்னர் பண்றீங்க. இந்த மாதிரி பண்ணக்கூடிய ஆளு நான் இல்லை என்று சொல்கிறார். உடனே விஜயா, முழு பூசணிக்காவையே சோத்துல மறைச்சு எல்லோரும் காதுலையும் பூ சுத்தினவள் நீனு, அதனால் என்ன வேணாலும் செய்யக்கூடியவள் தான் என்று சொல்கிறார்.

இப்பொழுது தான் விஜயா முதல்முறையாக சரியாக சொல்லி இருக்கிறார். ஆனால் இதையும் கெடுத்து விடும் விதமாக அண்ணாமலை, குடும்பத்தில் இருப்பவர்கள் என்னதான் சண்டை போட்டாலும் இந்த அளவுக்கு யாரும் பண்ண மாட்டாங்க. அதனால் வெளியில் இருந்து யாரோ தான் பண்ணி இருக்கிறார் என்று முத்துவிடம் சொல்கிறார். உடனே முத்து அதையும் நான் கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக சுருதி, ஹோட்டலுக்கு வேலை பார்ப்பதற்காக போகிறார். அங்கே நீத்து சுருதியை கூப்பிட்டு ஹோட்டலுக்கு நல்ல ரிவ்யூ கிடைத்திருக்கிறது. நான் இதற்காக தான் பாடுபட்டேன், என்னுடைய அப்பா என் மீது வைத்த நம்பிக்கையை நான் நிறைவேற்றி விட்டேன் என்று நீத்து பெருமையாக அவரைப் பற்றி ஸ்ருதியிடம் சொல்கிறார். உடனே சுருதி இதற்கெல்லாம் காரணம் ரவி தான் என்று சொல்லியதும் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஆகிவிட்டது.

உடனே ரவி, சுருதியை திட்டி விட்டு அனுப்பி விடுகிறார். சுருதி நீ இங்கே வேலை பார்க்க கூடாது என்று கூப்பிட்ட நிலையில் ரவி சுருதி சொல்வதை புரிந்து கொள்ளாமல் நீந்துவிடம் மன்னிப்பு கேட்கிறார். அடுத்ததாக ரோகிணி வித்யாவிடம் கேட்டுக் கொண்ட படி முருகன் வந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை ரோகினி இடம் கொடுக்கிறார். அந்த பணத்தை ரோகிணி வாங்கிவிட்டு லோக்கல் ரவுடி சிட்டியிடம் கொடுத்து நகை வாங்கி விடுகிறார்.

ரோகினி வாங்கிய நகை போலியான நகை என்று தெரியாமல் அதை எடுத்து வந்து விஜயாவிடம் கொடுத்து ஐஸ் வைக்கிறார். விஜயாவும் நகையை பார்த்த உடனே அதை வாங்கி விட்டு சந்தோஷப்படுகிறார். அதுவும் ரோகினி எப்படி கொடுக்கிறார் என்றால் இந்த நகை பார்த்ததும் உங்களுடைய சின்ன வயசு ஞாபகம் உங்களுக்கு வரும். அந்த அளவிற்கு சின்ன வயசு பொண்ணாகவே மாறி விடுவீங்க என்று சொல்லி ஐஸ் வைக்கிறார்.

அடுத்ததாக கோவிலில் வேலை பார்க்கும் அம்மாவை பார்ப்பதற்காக மீனா போகிறார். அப்படி போன இடத்தில் மீனாவின் அம்மா சொன்ன விஷயம் என்னவென்றால் சீதா தினமும் வெளியே இருந்து ரொம்ப நேரம் யாருக்கோ போன் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். சீதாவின் நடவடிக்கைகள் கொஞ்சம் சரியில்லை என்று மீனாவிடம் சொல்கிறார்.

அந்த வகையில் சீதா காதல் விஷயம் மீனா மற்றும் மீனாவின் அம்மாவுக்கு தெரிய போகிறது. ஏற்கனவே முத்துவுக்கு அருணுக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் இந்த கல்யாணத்தை நடத்தி வைக்க மாட்டேன் என்று மீனாவின் அம்மா சொல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கடைசியில் முத்து தான், அருணுக்கும் எனக்கும் தான் சண்டை மத்தப்படி அருண் நல்லவன் தான். நான் விசாரித்து பார்த்து விட்டேன் என்று சொல்லி சீதாவின் கல்யாணத்தை நடத்தி வைக்க போகிறார்.