வெற்றிமாறன் டைரக்ஷன்ல நடிச்சாச்சு.. அடுத்து சூரியின் கனவு இயக்குனர்

Soori : சூரிக்கு இப்போது சுக்கிர திசை அடிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட் லிஸ்டில் இணைந்து வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை மற்றும் விடுதலை 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து கருடன், கொட்டுகாளி ஆகிய படங்களில் சூரி நடித்த நிலையில் அந்த படங்களும் வெற்றியை தழுவியது. இந்த சூழலில் சமீபத்தில் சூரியின் மாமன் படம் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது.

மாமன் படம் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு நாட்களில் 12 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. மேலும் சூரி தன்னுடைய கனவு இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார். அதாவது தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் வெற்றிமாறன் படத்தில் சூரி நடித்து விட்டார்.

சூரியின் கனவு இயக்குனர் யார் தெரியுமா?

அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே மாமன் இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கலந்து கொண்டபோது தனது தயாரிப்பு நிறுவனத்தில் பத்தில் ஐந்து படங்கள் சூரியின் படங்களாகத் தான் வருகிறது என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் சூரியும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் மூன்று படங்களில் நடிக்க இருப்பதாக கூறியிருந்தார். ஆனாலும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சூரிக்கு நிறைவேறுகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் மாமன் வெற்றியை தொடர்ந்து சூரி அடுத்ததாக மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு சூரி செம பிசியாக இருந்து வருகிறார்.