பாண்டியனின் மகளை சித்திரவதை பண்ணும் சுகன்யா.. சரவணனுக்கு தெரியவரும் தங்கமயிலின் போலி நகை

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதி மருமகள்களின் நகையை எடுத்துட்டு வந்து மீனா ராஜி தங்கமயில் இடம் கொடுக்கிறார். ஆனால் தங்கமயில் நகை கருத்துப் போய்விட்டதால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் பயத்தில் இருக்கிறார். உடனே மீனா மற்றும் ராஜி இப்போதைக்கு இந்த நகை போட வேண்டாம் என்று தங்கமயில் இடம் சொல்கிறார்.

அதற்கு தங்கமயில் அத்தை அதை பற்றி கேட்டால் என்ன சொல்ல என கேட்ட பொழுது இந்த டிரஸ்ஸுக்கு அது செட்டாகவில்லை என்று சொல்லி சமாளித்து விடலாம் என சொல்கிறார்கள். ஆனால் சமீபத்தில் சரவணனுக்கு மட்டும் எல்லா உண்மையும் தெரிந்து கொண்டே இருக்கிறது. அரசி காதல் விஷயம், தங்கமயில் படிப்பு விஷயம் போன்ற விஷயங்களுடன் தொடர்ந்து தங்கமயில் கொண்டு வந்த நகை போலியான நகை என்றும் சரவணனுக்கு அடுத்து தெரிய வரப்போகிறது.

இதனால் இன்னும் அதிக அளவில் பூகம்பம் வெடிக்க போகிறது. அடுத்ததாக அரசிக்கு நிச்சயதார்த்தம் பண்ணுவதற்கு மாப்பிள்ளை விட்டார்களும் வந்து விட்டார்கள். அரசி பொண்ணு மாதிரி ரெடி ஆகி வந்த நிலையில் சதிசும் பக்கத்தில் உட்கார்ந்து அரசிடம் பேச ஆரம்பித்து விட்டார். நிச்சயதார்த்தம் ஆரம்பித்த நிலையில் குமரவேலு, சுகன்யாவுக்கு போன் பண்ணுகிறார்.

அந்த வகையில் குமரவேலு தான் போன் பண்ணுகிறார் என்று தெரிந்தது அரசி பயந்துவிட்டார். அதற்கு ஏற்ற மாதிரி சுகன்யாவும் அரசியை சித்திரவதை பண்ணும் விதமாக குமரவேலுவிடம் பேசு என்று டார்ச்சர் பண்ணுகிறார். அதனால் தான் சுகன்யா, அரசியை தனியாக அனுப்பி வைத்து குமரவேலுமிடம் அரசியை சிக்க வைத்து விட்டார். இந்த அரசியும் குமரவேலு மிரட்டல் விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் பயந்து போனதால் குமரவேலு கஸ்டடியில் இருக்கிறார்.