Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு லோக்கல் கவுன்சிலர் மூலம் பிரச்சினை வருகிறது. இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் பாக்கியா முழித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் லோக்கல் கவுன்சிலர் குடித்துவிட்டு வராமல் சாப்பிட்டு அமைதியாக போனதால் பாக்யா சரியான நேரத்திற்கு வீட்டுக்கு போய் விடுகிறார்.
அங்கே போனதும் ஈஸ்வரி வழக்கம் போல் ஒரு பிரச்சினையை பாக்கியாவிடம் சொல்கிறார். அதாவது நீ வீட்டு வேலையை பார்க்காமல் ஹோட்டலுக்கு போவதால் அமிர்தா மற்றும் ஜெனிக்கு இடையே வேலை பார்ப்பதில் பிரச்சனை வருகிறது. இதனால் செழியன் எழிலுக்கும் இடையே விரிசல் வர ஆரம்பித்து விடும் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியம் இந்த பிரச்சனைக்கு நான் ஒரு முடிவு கட்டுகிறேன் என்று சொல்கிறார்.
பிறகு ஹோட்டலில் வேலை பார்க்கும் ஒரு நபரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பாக்கியா, இனி சமையல் வேலை, வீட்டு வேலை ஜெனி குழந்தை எல்லாத்தையும் இந்த அக்கா பார்த்துக் கொள்வாங்க. இனி யாரும் எந்த வேலையும் பார்க்க வேண்டாம் எந்த பிரச்சனையும் வராது என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி, வேலை பார்ப்பதற்கு சம்பளம் கொடுக்க வேண்டும். அதற்கு என்ன பண்ணப் போகிறாய் என்று கேட்கிறார்.
அதற்கு பாக்கியம், அதுதான் என் பிள்ளைகள் இரண்டு பேரும் வீட்டில் உள்ளே வரவு செலவுகளை பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி இருந்தாங்க தானே, அதனால அவங்களே சம்பளத்தை கொடுத்துக் கொள்வார்கள் என்று சொல்கிறார். உடனே எழில் செழியனும் சரி என்று சொல்லிவிடுகிறார்கள். இதனால் பிரச்சனை முடிந்து விட்டது என்று சந்தோசத்தில் செழியன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ஈஸ்வரி, எல்லா செலவுகளையும் நீங்க பார்த்தீங்கன்னா உங்க பிள்ளைகளுக்கு நீ என்ன சேர்த்து வைப்பீங்க. அதுவும் நம்ம பார்க்கிற மாதிரி உன் பிள்ளைகளை வேலை செய்யக்கூடியவர் எப்படி பார்ப்பாங்கன்னு யாருக்கு தெரியும். எவ்வளவு சம்பளம் கொடுக்கணும் என்று விசாரித்து விட்டாயா? அது போக உனக்கு என்ன மிஞ்சும் என்று தேவையில்லாத வார்த்தைகளை சொல்லி செழியன் மனசை குழப்பி விட்டார்.
உடனே செழியனும் இதைப் பற்றி பேசலாம் என்று பாக்யாவின் ஹோட்டலுக்கு போகிறார். அங்கே போகும் பொழுது லோக்கல் கவுன்சிலர் பிரச்சினை பண்ணியதால் அதை செழியன் தட்டி கேட்ட பொழுது சண்டை வந்துவிடுகிறது. இதனால் செழியன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும்படி நிலைமை போய்விட்டது. இதையும் வைத்து ஈஸ்வரி, பாக்யாவை குறை சொல்லி ஜெனி மனசையும் மாற்றி இந்த வீட்டை விட்டு போகும் அளவிற்கு சகுனி வேலையை பார்க்கப் போகிறார்.
அடுத்ததாக இனியா, சுதாகரிடம் எங்க அம்மாவிடமிருந்து வாங்கின ரெஸ்டாரண்டை எப்பொழுது ஓபன் பண்ணுவீர்கள். அதை யார் பார்ப்பார் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு சுதாகர் நம்முடன் இருக்கும் வேலை ஆட்கள் யாராவது பார்ப்பாங்க என்று சொல்கிறார். உடனே இனியா அதை நானே மேனேஜ் பண்ணுகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டதும் சுதாகர் மற்றும் நித்தீஷ் அதிர்ச்சியாகி விட்டார்கள்.