இப்படி பண்ணிட்டியே குமாரு.. விஜய்யின் அரசியலை கலாய்த்த வில்லி நடிகை

Vijay: விஜய் அரசியலுக்கு வந்தது வெவ்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் இதையெல்லாம் நான் எதிர்பார்த்து தான் வந்தேன்.

எங்களின் ஒரே நோக்கம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். பாதுகாப்பான மாநிலமாக இருக்க வேண்டும். 2026ல் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என தொடர்ந்து விஜய் பேசி வருகிறார்.

ஆனால் ஆளும் கட்சியினர் இப்ப வந்து கேட்டா மொத்தமா தூக்கி கொடுத்துடுவாங்களா என பதிலடி கொடுத்து வருகின்றனர். இது எல்லாவற்றுக்கும் அடுத்த வருடம் விடை தெரிந்துவிடும்.

இப்படி பண்ணிட்டியே குமாரு

இது ஒரு பக்கம் இருக்க விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து திரை பிரபலங்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். அதில் சில படங்களில் வில்லியாக நடித்திருக்கும் காஜல் கிண்டலாக கமெண்ட் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய் அரசியலுக்கு வந்தது காமெடியா இருக்கு. இதெல்லாம் செட் ஆகாது. சினிமாவுக்கே வந்துடுங்க என சொல்லி இருக்கிறார்.

மேலும் பல வருடங்களுக்கு முன்பு விஜய்யை நான் ஒரு கிளப்பில் பார்த்தேன். ஆனால் பேசியது கிடையாது. இருந்தாலும் அவர் ஒரு நைஸ் பீஸ்.

அடிக்கடி மக்கள் கண்ணில் பட்டால் மதிக்க மாட்டாங்க. அரசியல் எல்லாம் வேண்டாம் நடிக்க வந்துடுங்க என ஜாலியாக ஒரு கோரிக்கையும் அவர் வைத்துள்ளார்.

இது போதாதா விஜய் எதிர்ப்பாளர்கள் அவர் கிளப்புக்கு போகிறார் என அலப்பறை செய்ய ஆரம்பித்து விட்டனர். ஆனால் இது 15 வருடங்களுக்கு முன்பு நடந்தது என காஜல் சொல்லி இருக்கிறார்.

அப்போதெல்லாம் முன்னணியில் இருக்கும் பிரபலங்கள் அடிக்கடி இது போன்ற கிளப் பார்ட்டி என கலந்து கொள்வது உண்டு. ஆனால் யாருக்கும் தெரியாமல் வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.