Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்துவிட வேண்டும் என்று பலர் கனவு கண்டு வருகிறார்கள். ஏனென்றால் அவருடைய ஒரு படத்தில் நடித்தால் எப்படியும் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்துவிடும்.
இப்படி இருக்கும் சூழலில் லோகேஷ் சில நடிகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தார். அப்படிதான் விஜய், கமல், ரஜினி என பெரிய நடிகர்களின் வாய்ப்பு அவருக்கு அடுத்தடுத்து கிடைத்தது.
இப்போது லோகேஷின் வலையில் மாட்டியிருக்கும் திமிங்கிலம் தான் அஜித். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தனக்காக படம் எடுக்க காத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியிருந்தார்.
லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் பெரிய நடிகர்
இப்படி இருக்கும் சூழலில் அஜித்திற்கான ஒரு வரி கதையை லோகேஷ் கூறியிருக்கிறார். அஜித்தும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டாராம். ஆகையால் இன்னும் இரண்டு வருடங்களில் லோகேஷ், அஜித் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருக்கிறது.
லோகேஷ் இன்னும் பத்து படங்கள் தான் எடுப்பேன் என்று முன்பே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனாலும் அந்த பத்து படங்களிலும் சினிமாவில் பெரிய நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களின் படங்களை அடுத்தடுத்து இயக்கி வருகிறார்.
இதில் ரோலக்ஸ், கைதி 2 ,விக்ரம் 2 போன்ற படங்களும் லிஸ்டில் இருக்கிறது. இப்போது அஜித்தின் படத்தை லோகேஷ் இயக்க இருப்பதும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த கூட்டணி உருவானால் தரமான சம்பவம் செய்யும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.