Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் கோவிலுக்கு வந்து நிச்சயம் நம்மளை கல்யாணம் பண்ணிவார் என்ற நம்பிக்கையில் வெண்ணிலா கோவிலில் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். அதற்கேற்ற மாதிரி பத்திரிக்கையாளர்களை வரவழைத்து பசுபதி ராகவி, காவிரி குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விதமாக எல்லாத்துக்கும் காரணம் அவங்க தான் என்று மொத்த பழியையும் தூக்கி போடுகிறார்கள்.
இந்த நேரத்தில் விஜய் மற்றும் காவிரி இருவரும் பொருட்காட்சி இடத்தில் பேசிக்கொண்டிருந்த வீடியோ வைரலானது ஒட்டி வெண்ணிலா சாகப் போகிறேன் என்று பிளாக்மெயில் பண்ண ஆரம்பித்து விட்டார். இதனால் பத்திரிகையாளர்கள் போலீசுக்கு தகவலை கொடுத்து போலீசையும் வர வைத்து விடுகிறார்கள்.
அவர்கள் வந்ததும் இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் விஜய் ஏன் இன்னும் வரவில்லை என்று விஜய்க்கு போன் பண்ணி கோவிலுக்கு வர வைக்கிறார்கள். போலீஸ் கூப்பிட்டதால் கோவிலுக்கு விஜய் வருகிறார். வந்ததும் வெண்ணிலாவின் மாமா, விஜயை வெண்ணிலா கழுத்தில் தாலி கட்ட சொல்லுகிறார்.
அப்பொழுது விஜய் நடந்து உண்மையை சொல்லும் விதமாக நான் இந்த பொண்ணை காதலித்தது உண்மைதான். ஆனால் திடீரென்று இந்த பெண் காணாமல் போய்விட்டால், ஆனாலும் நான் இரண்டு வருஷமாக இந்த பெண்ணை தேடி அலைந்து பார்த்தேன்.
அப்பொழுது என்னுடைய தாத்தா பாட்டி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று தீர்மானமாக இருந்ததால் நான் காவேரியை கல்யாணம் பண்ணிக்கொண்டு காதலிக்க ஆரம்பித்து விட்டேன் என்று தெளிவாக சொல்கிறார். ஆனால் வெண்ணிலா, நான் காணாமல் போகவில்லை உன் சித்தப்பா தான் எங்களை விபத்துக்கு ஆளாகினார்.
அதனால் என்னுடைய ஞாபகம் எல்லாம் மறந்து நான் எங்கே இருக்கேன் என்று தெரியாத அளவுக்கு இருந்தேன். இதனால் பாதிக்கப்பட்டது என்னுடைய குடும்பம் தான், உங்க சித்தப்பா தான் என்னுடைய குடும்பத்தை காலி பண்ணினார் என்று சொல்லிய நிலையில் அப்படியே இந்த கேஸ் அஜயின் அப்பா பக்கம் திரும்பி விட்டது.
உடனே அஜய் அப்பா, இதிலிருந்து தப்பிப்பதற்காக எல்லாத்தையும் நான் விஜய் சொல்லி தான் செய்தேன் என்று விஜய் மீது பழியை தூக்கி போட்டு விட்டார். உடனே போலீஸ், விஜய் மற்றும் அஜயின் அப்பாவை விசாரிப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விட்டார்கள். ஆக மொத்தத்தில் வெண்ணிலா எதிர்பார்த்தபடி கல்யாணம் நடக்காமல் போய்விட்டது.
இன்னொரு பக்கம் விஜய் மற்றும் காவிரி பொருட்காட்சியில் வைத்து பேசின வீடியோவை பார்த்த கங்கா மற்றும் யமுனா இருவரும் சேர்ந்து சாரதாவிடம் இவர்களை சேர்த்து வைத்து விடுமா, பிரிக்க வேண்டாம் என்று சிபாரிசு செய்கிறார்கள்.
இதில் கங்கா நல்லவிதமாக சொல்லி இருந்தாலும் யமுனாவை பொருத்தவரை விஜய் காவேரி ஒன்று சேர்ந்து விட்டால் நவீன் நம்ம வழிக்கு வந்து விடுவார் என்ற சுயநலத்தினால் சாரதாவிடம் பேசுகிறார். அதனால் வெண்ணிலா பிரச்சனை முடிவானதும் சாரதா நிச்சயம் விஜய் மற்றும் காவிரி ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்.