முத்துவுக்கு காதலனை அறிமுகப்படுத்திய சீதா.. அதிர்ச்சியில் மீனா அருண், ஏற்படும் குளறுபடி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரவி ஹோட்டலுக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் பொழுது சுருதி ஹோட்டலுக்கு வேலை பார்க்க போகக்கூடாது. பார்க்கும் வேலையை விட்டுவிட்டு உன்னுடைய கனவை நிறைவேற்றும் விதமாக புதுசாக நீயே ஒரு ஹோட்டல் ஓபன் பண்ணுவதற்கு தயார் பண்ணு என்று சொல்கிறார். அதற்கு ரவி இன்னும் நான் கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது.

அதனால் எப்பொழுது ஹோட்டல் ஓபன் பண்ணனும், என்ன பண்ணனும் என்று எனக்கு தெரியும் என சொல்கிறார். உடனே சுருதி, உன்னை மதிக்காத அந்த இடத்திற்கு நீ ஏன் போக வேண்டும். உன் உழைப்பை நல்லா எடுத்துக்கிட்டு இப்பொழுது ஹோட்டல் உன்னால் ஓடவில்லை, அவங்க செய்த மார்க்கெட்டிங் தான் வெற்றி பெற்று இருக்கிறது என்பதை சொல்லி உன்னை தாழ்த்துகிறார். இது உன்னுடைய இமேஜுக்கு சரியில்லை என்று சொல்கிறார்.

ஆனால் ரவி, சுருதி சொல்வதை காது கொடுத்து கேட்காமல் கிளம்பி விடுகிறார். அடுத்ததாக சீதா, அருணை பார்ப்பதற்காக வீட்டிற்கு போகிறார். அங்கே அருணுக்கு சஸ்பெண்ட் ஆன விஷயத்தை தெரிந்து கொண்டு இந்த நேரத்தில் நம்முடைய காதல் விஷயத்தை மாமாவுக்கும் அக்காவுக்கும் தெரியப்படுத்தி நாம் மீட் பண்ணுவதற்கு தயாராகி விடுவோம் என்று ஐடியா கொடுக்கிறார்.

அதன்படி டிராபிக் போலீஸ் அருண் சரி என்று சொல்லி நாளை சந்திப்பதற்கு தயாராகி விட்டார். இந்த விஷயத்தை சீதா, மீனாவிடம் வந்து சொல்லி, கோவிலுக்கு நாளைக்கு மாமாவை கூட்டிட்டு வா. நானும் என்னுடைய காதலனை கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்துகிறேன். உங்களுக்கு எல்லாம் ஓகே ஆன பிறகு அம்மாவிடம் சொல்லலாம் என்று சொல்லிவிடுகிறார்.

இந்த விஷயத்தை மீனா, முத்துவிடம் சொல்ல வேண்டும் என்று வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் ரோகிணி, சிட்டியிடம் இருந்து வாங்கிட்டு வந்த நகையை விஜயாவிடம் கொடுக்கிறார். விஜயா வாங்குவதற்கு கொஞ்சம் கெத்து காட்டிய பொழுது கடைசியில் விஜயாவை ஐஸ் வைத்து ரோகிணி நகையை கொடுத்து விடுகிறார். பிறகு முத்துவை தனியாக கூட்டிட்டு மீனா, சீதா காதலிக்கும் விஷயத்தை சொல்கிறார்.

இதை எதிர்பார்க்காத முத்து அதிர்ச்சியாகிய நிலையில் நாளைக்கு நாம் இருவரும் சென்று மீனா காதலிக்கும் நபரை சந்தித்து பேசலாம் என சொல்கிறார். அதன்படி கோவிலுக்கு அருண் சீதா இரண்டு பேரும் வந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் அங்கே முத்து மற்றும் மீனாவும் வந்து விடுகிறார்கள். அப்பொழுது சீதா, மாமா என்று முத்துவை கூப்பிட்டு அருணுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

அருளும் வந்து பார்த்த நிலையில் எல்லோரும் அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். ஏற்கனவே முத்து மற்றும் அருண் இரண்டு பேரும் பரம எதிரியாக இருக்கிறார்கள். தற்போது சீதா காதலிக்கும் நபர் அருண் தான் என்று தெரிந்ததும் முத்து என்னை பழிவாங்குவதற்கு தான் சீதாவை காதலிப்பது போல் நடிக்கிறான் என்று புதுசாக ஒரு விஷயத்தை சொல்லி அனைவரையும் குழப்பப் போகிறார். ஆனாலும் மீனா இந்த பிரச்சனையை சமாளித்து சீதா ஆசைப்பட்ட மாதிரி முத்துவின் ஆசிர்வாதத்துடன் அருணுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க போகிறார்.