பாக்கியாவிற்காக வக்காலத்து வாங்கிய செழியன்.. இனியாவை அடிமைப்படுத்திய சுதாகர்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா சுதாகரிடம் நான் வீட்டில் சும்மா தான் இருக்கிறேன் எனக்கு போர் அடிக்கிறது. அதனால் ரெஸ்டாரண்டை மேனேஜ் பண்ணும் விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டதும் சுதாகர், உங்க அம்மா இப்படி கேட்க சொன்னாங்களா என்ன கேட்கிறார். அதற்கு இனியா அவங்க இதை பத்தி பேசவில்லை நானா தான் உங்ககிட்ட கேட்கிறேன் என சொல்கிறார்.

உடனே இனியாவின் மாமியார், கல்யாணம் முடிந்த இத்தனை வருஷத்தில் நான் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. நான் வீட்டில் தான் இருக்கிறேன் எனக்கு போர் என்று நான் யாரிடமும் சொல்லவில்லை. இவங்க பிசினஸ் விஷயத்திலும் நான் தலையிடவே இல்லை என்று சொல்கிறார். அப்பொழுது இனியா, அப்படி என்றால் நான் வெளியே வேலை தேடி பார்த்து போகட்டுமா என கேட்கிறார்.

அதற்கு சுதாகர் மற்றும் நிதீஷ் வேண்டாம் என்று சொல்லி வீட்டில் உள்ள வேலையை பார்க்கச் சொல்லி விட்டார்கள். அடுத்ததாக பாக்கியா, ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது செழியன் அங்கே வருகிறார். அப்பொழுது செழியன் அங்கே இருக்கும் பட்சத்தில் லோக்கல் கவுன்சிலர் வந்து பாக்யாவை தவறான வார்த்தைகளுடன் பேசி கொச்சைப்படுத்துகிறார்.

இதை பார்த்து செழியன் கோபப்பட்டு லோக்கல் கவுன்சிலரை அடித்து பிரச்சினையாகி விடுகிறது. பாக்கியா இந்த பிரச்சினையை தடுத்து செழியினை வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். போனதும் எழில் என்னாச்சு என்று கேட்டதும் நடந்த விஷயத்தை சொல்கிறார். உடனே எழிலும் கோவப்பட்டு அடிக்கப் போகும் பொழுது பாக்கியம் தடுத்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரி வழக்கம் போல் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் பாக்கியா தான் என்று திட்ட ஆரம்பிக்கிறார்.

அடுத்ததாக செழியன் வேலை விஷயமாக ரெண்டு மாசம் ஜெனியை கூட்டிட்டு வெளியூர் கிளம்புகிறார். இந்த சமயத்தில் லோக்கல் கவுன்சிலர் கொடுத்த புகாரின் படி செழியனை போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகிறார்கள். இதனால் செழியன் வேலையும் இல்லாமல் அவமானப்பட்டு நிற்கப் போகிறார். இதற்கெல்லாம் காரணம் பாக்கியதான் என்று பாக்கியம் மீது பழி விழப்போகிறது.