Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நிலா குடும்பத்தை கூட்டிட்டு பொண்ணு வீட்டிற்கு போய்விட்டார். அங்கே எல்லாம் நல்லபடியாக நடந்த நிலையில் சேரனும் பொண்ணும் தனியாக பேசிக் கொண்டார்கள். இதுவும் சுமூகமாக முடிந்த நிலையில் பொண்ணு மாப்பிள்ளையும் போனில் பேசிப் புரிந்து கொள்ளட்டும் என்று போன் நம்பரை வாங்கிக் கொள்கிறார்கள்.
அடுத்து வீட்டிற்கு வந்ததும் எல்லோரும் சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் சேரனுக்காக பார்த்திருந்த பொண்ணு சேரனிடம் பேசுவதற்காக போன் பண்ணுகிறார். உடனே எல்லோரும் சேர்ந்து சேரனை பேச சொல்லி வெளியே அனுப்புகிறார்கள். அந்த வகையில் அந்தப் பெண்ணும் சேரனிடம் நல்லா பேச ஆரம்பித்து விட்டது.
ஆனால் சேரன் என்ன பேசுவது என்று தெரியாமல் சமையல் சாப்பாடு வீட்டு வேலை அதைப்பற்றி பேசி அந்த பெண்ணுக்கு எரிச்சல் படுத்தும் விதமாக பேசி கடுப்பாக்கி விட்டார். இதனால் நிலா பார்த்த இந்த சம்பந்தம் பாதிலேயே வேண்டாம் என்று போய்விடுகிறார்கள். அப்பொழுதுதான் நிலாவிற்கு தெரிந்தது சேரனுக்கு ஏத்த பொண்ணு கார்த்திகா தான்.
சேரனுக்கும் கார்த்திக் தான் பிடித்திருக்கிறது என்று புரிந்து கொண்டார். அந்த வகையில் நிலா, சேரன் அண்ணாவுக்கு நாம் வெளியே எங்கேயும் பொண்ணு தேட வேண்டாம். அவர் மனதில் கார்த்திகா தான் இருக்கிறார் என்று நமக்கு தெரிகிறது. அதனால் அவர் ஆசை நிறைவேற்ற வேண்டும் என்றால் நாம் அனைவரும் சேர்ந்து கார்த்திகா வீட்டிற்கு பொண்ணு கேட்க போக வேண்டும் என்று சொல்கிறார்.
இத கேட்டதும் பாண்டியன் மற்றும் சோழன் இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்கிறார்கள். ஆனால் நிலா, சேரன் அண்ணாவுக்காக ஏதாவது பண்ணி தான் ஆக வேண்டும் என்று சொல்கிறார். உடனே நிலா பேச்சைக் கேட்டுக் கொண்டு சரி என்று சம்மதித்து சேரனுக்கு தெரியாமல் சோழன் பல்லவன் பாண்டியன் மற்றும் நிலா அனைவரும் பூ தாம்பல தட்டு தூக்கிட்டு கார்த்திகா வீட்டுக்கு போகிறார்கள்.
வழக்கம்போல் கார்த்திகா குடும்பத்திற்கு இந்த குடும்பம் என்றால் ஆகவே ஆகாது. அதனால் நிலா கொண்டு வந்து தட்டை தட்டி விட்டு அனைவரையும் அவமானப்படுத்தி விட்டார்கள். இதையெல்லாம் பார்த்த கார்த்திகா, சேரன் மாமாவை நான் கல்யாணம் பண்ணுவதற்கு தயார் என்று நிலாவிடம் சொல்லப் போகிறார். அந்த வகையில் சோழன் மூலமாக சேரன் மற்றும் கார்த்திகாவிற்கு திருட்டு கல்யாணம் நடக்கப்போகிறது.