Mahanadhi Serial: விஜய் டிவியை பொறுத்தவரை டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்கும் ஆசை சீரியல் தான் அதிக புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்து வருகிறது. ஆனால் இதற்குப் போட்டியாக தற்போது அய்யனார் துணை சீரியல் கிட்ட நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்களின் பேவரைட் சீரியலாக விஜய் டிவியில் கொண்டாடப்படுவது மகாநதி சீரியலை தான்.
இதற்கு காரணம் விஜய் மற்றும் காவிரியின் கெமிஸ்ட்ரியும் நடிப்பும் மக்களை கவர்ந்ததால் அதிக அளவில் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட இந்த சீரியலில் நடிக்கும் ஆர்டிஸ்டிகளின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இதில் ஹீரோவாக நடிக்கும் விஜய் என்கிற சுவாமிநாதன் ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.
இவருக்கு ஜோடியாக காவிரி பாத்திரத்தில் நடிக்கும் லட்சுமி பிரியா மற்றும் நவீன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ருத்ரன் பிரவீனுக்கு ஒரு நாளைக்கு 10000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அடுத்ததாக கங்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் தாரணி ஹெப்சிபா என்பவர் ஒரு நாளைக்கு 6000 ரூபாய் சம்பளம், யமுனாவாக நடிக்கும் ஆதிரைக்கு 5000 ரூபாய் சம்பளம், ராகினி கேரக்டரில் நடித்து வரும் சகஸ்தியாவுக்கு 7000 சம்பளம்.
இவர்களை தொடர்ந்து பசுபதி கேரக்டரில் வில்லனாக நடித்து வரும் ரமேஷ்க்கு ஒரு நாளைக்கு 6000 ரூபாய் சம்பளம், தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சோமுவுக்கு ஒரு நாளைக்கு 8000 ரூபாய் சம்பளம், அஜய் கேரக்டரில் நடித்து வரும் பாஸ்கருக்கு 5 ஆயிரம், கல்யாணி பாட்டியாக நடித்து வருபவருக்கு 4000 கொடுக்கப்படுகிறது.
அத்துடன் காவிரி அம்மாவாக சாரதா கதாபாத்திரத்தில் நடித்தவரும் சுஜாதா சிவக்குமாருக்கு 7,000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. இவர்களை எல்லாம் விட அதிகமான சம்பளத்தை பெறுவது யார் என்றால் காவேரி அப்பா கதாபாத்திரத்தில் சந்தானம் கேரக்டராக நடித்து வந்த நடிகர் சரவணனுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம். இவருடைய கேரக்டர் கொஞ்ச நாள் வந்தாலுமே அனைவரது மனதிலும் இவருக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.