லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி கூட்டணியில் 400 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது கூலி. இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து போஸ்டர் வெளியிட்டிருந்தனர்.
இதில் ரஜினிக்கு மட்டும் 220 கோடிக்கு மேல் சம்பளம் மற்றும் லோகேஷ் கனகராஜுக்கு 60 கோடி சம்பளம் பேசப்பட்டு வசூல் ரீதியாக ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தலையில் இடியே இறக்கியது போல் பாலிவுட்டில் மாஸ் ஹீரோவான ரித்திக் ரோஷன் நடிப்பில் War-2 படம் இதே தேதியில் வெளிவரும் என்று அறிவித்திருந்தனர்.
வார் 2 படத்தில் ஜூனியர் NTR, Kiara advani, John Abraham போன்ற பல மாஸ் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகும் சூழ்நிலையில் டீசர் வெளியானது.
டீசர் வெளியான பின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி, எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசாக வேண்டிய இந்த படம் தள்ளி போக அதிக வாய்ப்பு உள்ளதாம். அதிகமாக இந்த டீசர் ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் கூலி படத்திற்கு எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
தலைவரோட ராசியா இல்ல என்னன்னு தெரியல தனிக்காட்டு ராஜாவாக கூலி படம் வெளிவருவதால் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். கோலிவுட்டில் முதல்முறையாக 1000 கோடி வசூலை தொடும் என்று மலை போல் நம்பி உள்ளனர், இது எல்லாமே லோகேஷ் கையில் தான் உள்ளது.