Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் செழியனை எப்படியாவது வெளியே கூட்டிட்டு வர வேண்டும் என்று ஜெனியின் அப்பா முயற்சி எடுக்கிறார். அப்பொழுது பாக்யா வீட்டிற்கு சுதாகர் வருகிறார். வந்ததும் இந்த பிரச்சனை எம்எல்ஏ அளவுக்கு போய்விட்டது. அதனால் என்னாலையும் எந்த உதவியும் பண்ண முடியவில்லை என்று சொல்லிவிடுகிறார்.
உடனே பாக்கியா வெளியே கிளம்புகிறார், அப்பொழுது ஈஸ்வரி எங்கே போகிறாய் என்று கேட்கிறார். யாராவது என் பையனை வெளியே கூட்டிட்டு வருவாங்க என்று என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால் நான் ஏதாவது பண்ணி செழியனை கூட்டிட்டு வருகிறேன் என்று கிளம்புகிறார். அப்படி கிளம்பும்போது செல்வியும் கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்.
அங்கே போயிட்டு லோக்கல் கவுன்சிலர் பிரச்சனை பண்ணி ரவுடிசம் பண்ணியதை சொல்லி பாக்கியா லோக்கல் கவுன்சிலர் மீது கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். உடனே போலீஸ் நான் விசாரித்து பார்க்கிறேன் என்று சொல்லி பாக்கியவை வீட்டிற்கு போக வைத்து விட்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜெனி அப்பா நேரடியாக வீட்டிற்கு வந்து பாக்யா செய்தது தவறு என்று சண்டை போடுகிறார்.
இதை கேட்டதும் ஈஸ்வரியும் பாக்யாவை திட்டுகிறார், உடனே ஜெனி நீங்க பேசாமல் சும்மா இருந்தா கூட செழியன் வீட்டிற்கு வந்து இருப்பான். உங்களிடம் உதவி பண்ணுங்க என்று கேட்டனா, ஏன் தேவையில்லாத வேலைகளை நீங்க பார்க்கிறீங்க என்று பாக்கியாவிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார். கடைசியில் ஒட்டுமொத்த குடும்பமும் பாக்யாவுக்கு எதிராக மாறிவிட்டது.
உடனே ஜெனி அப்பா, நீ இங்கே இருந்தது வரை போதும் இனிமேலும் இங்கே இருக்க வேண்டாம். என்னுடன் வீட்டுக்கு வா என்று சொல்லி குழந்தையையும் ஜெனியையும் கூட்டிட்டு கிளம்பி விடுகிறார். இதற்கும் பாக்கியா தான் காரணம் என்று ஈஸ்வரி திட்டி விடுகிறார். அடுத்து பாக்கியா நேரடியாக கவுன்சிலர் வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் நான் உங்கள் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கிவிட்டேன்.
நீங்களும் செழியன் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு அந்த கவுன்சிலர் இந்த டீல்க்கு நான் ஓகே சொல்லவில்லை. நீங்களும் என் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க வேண்டாம், நானும் வாங்க மாட்டேன் எப்படி செழியன் வெளியே வருகிறான் என்று பார்ப்போம். இப்போதைக்கு உங்க பையன் வெளியே வரவே முடியாது என்று பாக்யாவிடம் சவால் விட்டுவிட்டார்.
இதனால் பாக்கியம் என்ன பண்ணுவது என்று தெரியாமல் நிற்கிறார். ஆனால் பாக்யாவை நினைக்கும் போதும் பாவமாக இருக்கிறது. யாரோட உதவியும் இல்லாமல் சொந்த காலில் நின்னு தன்னுடைய செலவுகளை பார்த்து சுயமரியாதை உடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதை தவிர பாக்யா எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் பாக்யாவிற்கு தான் தொடர்ந்து ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.