தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் படம் நடிப்பதற்காக அட்வான்ஸ்சாக பணம் வாங்கிக்கொண்டு கால்ஷீட் கொடுக்க மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து படம் நடிப்பதற்கு அவருக்கு ரெட் கார்டு என்னும் தடை போடப்பட்டது. 2024 ஆம் ஆண்டு இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
ஆனால் தனுஷ் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு ராயன், கேப்டன் மில்லர் போன்ற படங்கள் வெளிவந்தது. இப்பொழுது கூட அவர் இயக்கி நடிக்கும் இட்லி கடை படமும் வெளிவர இருக்கிறது. அதை போல் நாகர்ஜுனாவுடன் இணைந்து நடிக்கும் குபேரன் படமும் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
வடிவேலு, விஷால், போன்றவர்களுக்கும் ரெட் கார்டு போடப்பட்டது. ஆனால் அவர்கள் அதிலிருந்து பல போராட்டங்களுக்கு பின்பு மீண்டு வந்து விட்டனர். இவர்கள் இவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் தனுஷ் மட்டும் ரெட் கார்டு பிரச்சனையை பொறுப்பெடுத்தாமல் தொடர்ந்து படத்தில் நடித்து வருவது தான் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இப்பொழுது தான் அதன் ரகசியம் வெளிவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக டான் பிக்சர்ஸ் ஓனர் ஆகாஷ் பாஸ்கரன் தான் தனுஷ் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார்.ரெட் கார்டு பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இந்த தயாரிப்பாளர் மட்டும், எப்படி தனுஷிற்கு இவ்வளவு சலுகைகள் கொடுக்கிறார் என்ற கேள்வி வந்தது.
ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் உதயநிதி நெருங்கிய நண்பர்களாம். அதுமட்டுமில்லாமல் அரசியலில் திமுகவிற்கு நெருங்கிய வட்டாரமான அன்பில் பொய்யாமொழி உறவினர் தான் இந்த ஆகாஷ் பாஸ்கரன். இதனால் தான் தனுஷ் ரெட் கார்டு, பெரிய பட்ஜெட் படங்கள் என வருகின்ற பிரச்சனைகளை அசால்டாக தவிடு பொடியாக்கி விடுகிறார்.