Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் காவேரி சந்தோசத்தை பறித்து அவர்களை நிம்மதி இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பழி வாங்குவதற்காக ராகினி பசுபதி, வெண்ணிலா மற்றும் அன்பரசு வைத்து விளையாடி வருகிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி வெண்ணிலா ஒரு பக்கம் விஜய்யை தாலி கட்ட சொல்லி டார்ச்சர் பண்ணுகிறார்.
இன்னொரு பக்கம் வெண்ணிலா குடும்பத்தை கொலை செய்ய சொன்னது விஜய் தான் என்று எல்லோரிடமும் அன்பரசு சொல்லி போலீஸ் இடம் விஜய்யை குற்றவாளி மாதிரி ஆக்கிவிட்டார். இந்த சூழ்நிலையை பார்த்த காவிரி எப்படியாவது விஜயை வெளியே கூட்டிட்டு வரவேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். அந்த வகையில் தாத்தாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வைத்து விட்டார்.
தாத்தா வரும்பொழுது லாயரை கூட்டிட்டு வந்து போலீஸிடம் கேட்கிறார். ஆனால் சாட்சிகள் எதுவும் சரியாக இல்லாததால் லாயரால் விஜயை வெளியே கூட்டிட்டு வர முடியவில்லை. உடனே லாயர், காவிரியிடம் ஏதாவது ஒரு சாட்சி கிடைத்தாலும் போதும் அதை வைத்து நான் இப்பொழுதே விஜய்யை வெளியே கூட்டிட்டு வந்து விடுவேன் என்று சொல்கிறார்.
அதற்கு காவிரி கொஞ்ச நேரம் யோசித்த நிலையில் அஜயின் அம்மாவுக்கு ஏதாவது உண்மை தெரிந்திருக்கும். அதனால் அவரிடம் பேசிப் பார்த்தால் நிச்சயம் விஜய்யை வெளியே கூட்டிட்டு வந்துவிடலாம் என்று தாத்தாவிடம் சொல்கிறார். உடனே தாத்தா, அஜயின் அம்மாவுக்கு போன் பண்ணுகிறேன் என்று சொல்கிறார். அதற்கு காவிரி போன் எல்லாம் பண்ண வேண்டாம் நேரடியாக பார்த்து பேசலாம் என்று தாத்தாவை கூட்டிட்டு காவிரி, விஜயின் சித்தி வீட்டுக்கு போய் விடுகிறார்.
அங்கே போனதும் விஜய் சித்தியிடம், விஜய் இப்பொழுது என்ன நிலைமையில் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரிந்தும் எப்படி வீட்டுக்குள் அமைதியாக இருக்கிறீர்கள். விஜய் மீது தவறான ஒரு பழி விழுந்திருக்கிறது, அதுவும் என்ன காரணம் யார் மூலம் என்று தெரியும். அதனால் நீங்கள் வந்து உண்மையை சொன்னால் மட்டும் தான் விஜய்யை காப்பாற்ற முடியும் என்று காவேரி சொல்கிறார்.
ஆனால் விஜயின் சித்தி, நான் இக்கட்டான சூழலில் இருக்கிறேன் என்னுடைய வீட்டுக்காரர் மற்றும் பையனை மீறி எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார். ஆனால் காவேரி மற்றும் தாத்தா, சித்தியின் மனசை மாற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து போலீஸிடம் உண்மையை சொல்ல வைக்கிறார்கள். அதன்படி விஜய் இந்த பிரச்சனையிலிருந்து வெளிவந்து விடுவார்.
அடுத்ததாக காவிரியின் நிலைமையை யோசித்து கங்கா, குமரனிடம் அழுது ஃபீல் பண்ணி பேசுகிறார். அப்படி பேசியதும் கங்காவுக்கு திடீரென்று வயிறு வலி வந்து கத்த ஆரம்பித்து விடுகிறார். உடனே சாரதா குடும்பத்தில் இருப்பவர்கள் கங்காவின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பயந்து போய் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் விட்டார்கள்.
சும்மாவே சாரதா ருத்ரதாண்டவம் ஆடும், இப்பொழுது கங்காவின் குழந்தைக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் எல்லோரும் காவிரி மீது தான் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் கங்கா குழந்தைக்கு ஏற்பட்ட பிரச்சனை பெருசாக இல்லாமல் எல்லோரும் சந்தோஷப்படும்படி சாதாரண வலியாகத்தான் இருக்கும். கடைசியில் ராகினி பசுபதி போட்ட பிளானை முறியடிக்கும் வகையில் காவிரி விஜயை காப்பாற்றி வெண்ணிலா முகத்தில் கரியை பூசி விட்டார்.