ரோகினி விஷயத்தில் மனோஜிடம் டீல் பேசிய விஜயா.. ஆணாதிக்க திமிரை காட்டும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினிடம் பேசாமல் இருந்தால் சரிப்பட்டு வராது என்று மனோஜ் முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் விஜயாவிடம் நான் ரோகினியை ஷோரூம் கூட்டிட்டு போகட்டா என்று பெர்மிஷன் கேட்கிறார். உடனே அண்ணாமலை, முத்து, மீனா என அனைவரும் ஒன்று கூடி விட்டார்கள்.

ரோகிணியும் நமக்காக மனோஜ் பேசுகிறார் என்று சந்தோசப்பட்டு விட்டார். அந்த வகையில் மனோஜ் பிடிவாதமாக விஜயாவிடம் ரோகிணி வந்தால் இன்னும் ஷோரூமில் நிறைய லாபம் கிடைக்கும். எனக்கு நன்றாக உதவியாகவும் இருப்பார் என்று சொல்கிறார். உடனே அண்ணாமலை, உன் மனைவியை கூட்டிட்டு போவதற்கு நீ யாரிடமும் பெர்மிஷன் கேட்க வேண்டாம், தாராளமாக கூட்டிட்டு போ என்று சொல்கிறார்.

அதற்கு மனோஜ், அம்மா சொல்லாமல் நான் எதுவும் பண்ண மாட்டேன் என்று சொல்லி பெர்மிஷன்காக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் முத்து, அம்மாவை சொல்லியும் தப்பு கிடையாது. இதுவே மீனா அம்மாவிடம் பொய் சொல்லி இருந்தால் அம்மாக்கு பெரிய விஷயமாக இருந்திருக்காது. ஏனென்றால் அம்மாவுக்கு மீனாவை பிடிக்காது.

ஆனால் ரோகிணி அப்படி இல்லையே, பிடித்த மருமகள் தலையில் தூக்கி வைத்து ஆடுனாங்க. இப்போது அந்த ரோகினி பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார் என்று தெரிந்ததும் அம்மாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்கிறார். உடனே ரோகிணி, இந்த முத்து வேற இதெல்லாம் பேசி மாமியார் மனசை இன்னும் குழப்புகிறார் என்று புலம்பிக் கொள்கிறார்.

அடுத்ததாக விஜயா, எல்லோரும் வற்புறுத்தியதால் மனோஜிடம் ரோகிணியை ஷோரூம் கூட்டிட்டு போ, என்ன வேணாலும் பண்ணு நான் எதுவும் கேட்க மாட்டேன் என்று சொல்லிய பொழுது மனோஜ் ரோகினி சந்தோஷப்பட்டு விட்டார்கள். உடனே முத்து, வெயிட் பண்ணுங்க அம்மா ஏதோ இன்னும் சொல்ல வராங்க என்று சொல்கிறார். அப்போதுதான் தெரிகிறது விஜயா, மனோஜை லாக் பண்ணுகிறார் என்று.

அதாவது நீ உன் இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பண்ணு ஆனால் எந்த பிரச்சனையும் எந்த காரணத்தை கொண்டும் என்னிடம் வந்து பேச வேண்டாம். நானும் இனி உன்னுடைய விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று சொல்லிவிட்டார். உடனே மனோஜ் நீங்க தான் எனக்கு முக்கியம் என்று சொல்வதற்கு ஏற்ப ரோகினி கூட்டிட்டு போகாமல் கடைக்கு போய் விடுகிறார்.

அடுத்ததாக சீதா மீனாவிற்கு ஃபோன் பண்ணி அருண் அம்மா வீட்டுக்கு வருகிறார் நீயும் வா என்று கூப்பிடுகிறார். அப்பொழுது மீனா நீ இன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கியா என்று கேட்கிறார். அதற்கு சீதா நான் பேசவில்லை, அவர் மெசேஜ் போட்டு இருந்தார் என்று சொல்கிறார். உடனே மீனா சரி நான் வருகிறேன் என்று சொல்லி கிளம்புகிறார்.

அப்பொழுது முத்து, நான் கொடுத்த இரண்டு ஜாதகத்தையும் உங்க வீட்டில் கொடுத்து எந்த ஜாதகம் பொருத்தமாக இருக்கிறது சீதாவுக்கு பிடித்திருக்கிறது என்று கேட்டுவிட்டு வா என அனுப்பி வைக்கிறார். இந்த முத்து அடுத்தவங்க விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து ஆணாதிக்க திமிரை காட்டுகிறார். ஒரு பக்கம் அருண் தவறாக இருந்தாலும் இன்னொரு பக்கம் முத்துவும் முரட்டுத்தனமாக தான் நடந்திருக்கிறார்.

அதனால் இரண்டு பேரும் மீது தான் தவறு இருக்கிறது. இதனை அடுத்து மீனா அம்மா வீட்டுக்கு போகிறார். அங்கே போனதும் அருண் அம்மா வந்து பேசுகிறார். அப்பொழுது சீதாவின் அம்மா, இந்த வீட்டுக்கு எல்லாம் எங்களுடைய மூத்த மாப்பிள்ளை தான். அதனால் அவருக்கு பிடிக்காத விஷயத்தை நான் எப்போதும் பண்ண மாட்டேன் என்று அருண் அம்மாவிடம் சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக மீனாவை சந்தித்த அருண் என் மனதிற்குள் சீதா தான் இருக்கிறார். சீதாவை நான் உண்மையாகவே காதலிக்கிறேன், நான் சீதாவை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாக பார்த்துக் கொள்வேன் என்று மீனாவிடம் சொல்கிறார். உடனே மீனா இந்த விஷயத்தை முத்துவிடம் சொல்கிறார். இதுதான் சான்ஸ் என்று முத்து மறுபடியும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ஓவராக ஆடுகிறார்.