வீரா சீரியல் ராமச்சந்திரனுக்கு ஆப்பு வைத்த மருமகள்.. மாறனை கூட்டிட்டு வெளியேறிய வீரா

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜி ஏதோ ஒரு சதி திட்டம் பண்ணி தான் கார்த்திக்கை கல்யாணம் பண்ணி இருக்கிறார். விஜிக்கு பின்னாடி ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என்று முதலில் மாறனுக்கு சந்தேகம் வந்தது. அதன்படி விஜி ரகசியமாக வைத்திருந்த போனை மாறன் எடுத்து விட்டார்.

அந்த வகையில் இந்த விஷயத்தை வீராவிடம் சொல்லி விஜிய்யின் உண்மையான கதை என்ன என்று கண்டுபிடிப்பதற்கு மாறனுடன் வீரா கூட்டணி வைத்தார். இவர்கள் நம் பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதற்காக விஜி தடை செய்யப்பட்ட மருந்துகள் விஷயத்தில் மாறனை சிக்க வைத்து விட்டார்.

உடனே போலீஸ் இராமச்சந்திரன் வீட்டிற்கு வந்து மாறனை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகிறார்கள். பிறகு ராமச்சந்திரன், மாறன் தவறு செய்திருப்பான் என்று நம்பி விட்டார். ஆனால் வீராவிற்கு மாறன் மீது நம்பிக்கை இருந்ததால் மாறனுக்கு சப்போர்ட்டாக ராமச்சந்திரனிடம் பேசினார்.

பிறகு வீரா சப்போர்ட்டில் மாறன் வெளியே வந்து சதியில் சிக்கியதற்கு பின்னணியின் காரணம் என்ன என்று கண்டுபிடிப்பதற்கு முயற்சி எடுத்தார். அந்த வகையில் மாறன் நிரபராதி என்று உறுதியாகிவிட்டது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ராமச்சந்திரன், உள்ளே வா என்று கூப்பிடுகிறார்.

உடனே வள்ளி அத்தை மாறன் கையை பிடித்து உள்ளே கூட்டிட்டு போகிறார். ஆனால் வீரா, மாறனை தடுத்துவிட்டு நீங்க பெத்த பிள்ளை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாத போது இனி நாங்கள் இரண்டு பேரும் இந்த வீட்டில் இருக்க மாட்டோம் என்று சொல்லி ராமச்சந்திரனுக்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டார்.

அத்துடன் வீட்டிற்கு வெளியே ஒரு குடிசை மாறி போட்டுவிட்டு அதில் தனியாக மாறன் மற்றும் வீரா தங்கிக் கொள்கிறார்கள். இனியாவது ராமச்சந்திரனுக்கு மாறன் மற்றும் வீராவை பற்றி புரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் விஜி பற்றிய ரகசியத்தையும் கண்டுபிடித்து விஜியை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு மாறன் மற்றும் வீரா அதிரடியாக களத்தில் இறங்கப் போகிறார்கள்.