இந்த வருடம் அறிமுகமான 5 வாரிசுகள்.. தனுசுக்கு போட்டியாக இறக்கிய விஜய் ஆண்டனி

Dhanush : பொதுவாக வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. ஆனாலும் அவர்களுக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைத்தாலும் வெற்றி என்பது அவர்களின் திறமையை பொறுத்தே அமையும்.

அவ்வாறு இந்த வருடம் அறிமுகமான ஐந்து வாரிசு நடிகர்களை இந்த பதிவில் பார்க்கலாம். மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் தான் அன்பு. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் அறிமுகம் ஆனார்.

இந்த வருடம் அவர் கதாநாயகனாக நடித்த எமன் கட்டளை படம் வெளியாகி இருந்தது. அடுத்ததாக தனுஷ் தனது அக்கா மகன் பவிஷை கதாநாயகனாக இறக்கியிருந்தார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பவிஷை வைத்து இயக்கியிருந்தார்.

இந்த வருடம் அறிமுகமான 5 வாரிசு நடிகர்கள்

இந்த படம் சரியாக போகாமல் தோல்வியை தழுவியது. இதனால் தனது பேரன் நன்றாக படித்துக் கொண்டிருந்தான், அவனை தனுஷ் சினிமாவுக்கு அழைத்து வந்ததாக கஸ்தூரி ராஜா கூறியிருந்தார். இதை அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் மார்கன் படம் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் அவரது அக்கா மகன் அஜய் தீஷனை இறக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் அஜய் சீரியல் கில்லர் ஆக மிரட்டி இருக்கிறார். மார்கன் படம் வருகின்ற ஜூன் 27ஆம் தேதி திரைக்க வர இருக்கிறது.

அடுத்ததாக சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். ராம்குமாரின் இளைய மகனான தர்ஷன் புதுமுக இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

அடுத்ததாக முரளியின் இளைய மகனும் அதர்வாவின் தம்பியும் ஆன ஆகாஷ் முரளி நேசிப்பாயா படத்தின் மூலம் கதாநாயகனாக களம் கண்டு உள்ளார். இதில் யார் யார் பெரிய நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள் என்பது அவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களை பொறுத்தே அமைய இருக்கிறது.