ஷங்கரை அசிங்கப்படுத்த இப்படி ஒரு காரணமா.? எடிட்டரை விளாசிய பிரபலம்

Shankar : கடந்த சில தினங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் ஷங்கரை பற்றி எடிட்டர் ஷமீர் முகமது பேசியதுதான். அதாவது ஷங்கர் கடந்த சில வருடங்களாக இயக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாமல் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இந்தியன் 2, கேம் சேஞ்சர் என இரண்டுமே பெரிய தோல்வியை கொடுத்தது. அடுத்ததாக ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 3 படம் வெளியாக இருக்கிறது. இந்தச் சமயத்தில் நரிவேட்டை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் எடிட்டர் சமீர் முகமது கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் ஷங்கருடன் பணியாற்றியது மிகவும் மோசமான அனுபவம் என்று கூறியிருந்தார். அதாவது ஏழரை மணி நேரம் படத்தை கொடுத்து மூன்று மணி நேரம் ஆக்க சொன்னார்கள். இதற்காக மூன்று வருடங்கள் பணியாற்றினேன்.

ஷங்கர் பக்கம் நிற்கும் மூத்த பத்திரிக்கையாளர்

அதன் பிறகு அந்த படத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இதனால் தயாரிப்பாளருக்கு தான் நஷ்டம் என்று ஷங்கரை விமர்சித்து கூறி இருந்தார். இதை அடுத்து நெட்டிசன்களும் ஷங்கரை ட்ரோல் செய்து மீம்ஸ்கள் போட ஆரம்பித்து விட்டனர்.

இதனால் கொந்தளித்த மூத்த பத்திரிக்கையாளர் சுபைர் எடிட்டர் ஷமீரை பற்றி பேசி இருக்கிறார். அதாவது நரிவேட்டை ப்ரமோஷனுக்காக இயக்குனர் ஷங்கரை பற்றி பேசியிருக்கிறார். இப்போது இதுதான் டிரெண்ட் ஆகிவிட்டது.

வேறு ஒரு பிரபலத்தை பற்றி பேசினால் அது சர்ச்சையாகி படத்திற்கு ப்ரமோஷன் ஆக அமைந்து விடுகிறது. அது நரிவேட்டை பிரமோஷன் என்றால் அந்த படத்தை பற்றி தான் பேச வேண்டும்.

பெரிய ஹீரோக்களை தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்தால் அவரது ரசிகர்கள் ஹிட் கொடுப்பார் என்று காத்திருக்கின்றனர். தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்தாலும் மீண்டும் அவர்களை நம்பி பணத்தை போட்டு படத்தை எடுத்து வருகிறார்கள்.

ஷங்கர் ஓரிரு தோல்வி படங்கள் கொடுத்து விட்டதால் அவரைப் பற்றி இழிவாக பேசக்கூடாது. கண்டிப்பாக அவர் மிக விரைவில் கம்பேக் கொடுப்பார் என்று சுபைர் பேசியிருக்கிறார். இந்தியன் 3 படத்தின் மூலம் ஷங்கர் தன்னை மீண்டும் நிரூபிப்பார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.