கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் எடுப்பதெல்லாம் கேங்ஸ்டர் படமா.? பிரபலம் போட்டா ட்வீட்

Lokesh Kanagaraj : சமீபகாலமாக கேங்ஸ்டர் படங்கள் அதிகம் தலை தூக்கி வருகிறது. அதுவும் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளம் இயக்குனர்கள் இதுபோன்ற படங்களை தான் எடுத்து வருகிறார்கள்.

பெருவாரியான ரசிகர்களும் இதுபோன்ற கதை காலத்தை தான் ரசித்து வருகிறார்கள். ஆகையால் சமீபகாலமாக அதிக படங்கள் ரத்தமும், கத்தியும் ஆகத்தான் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் போன்ற இயக்குனர்கள் எடுப்பது கேங்ஸ்டர் படமா என்று பிரபலம் ஒருவர் வினவி இருக்கிறார்.

அதாவது சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் கேங்ஸ்டர் படங்களின் ஹெட் மாஸ்டர் என்றால் அது புதுப்பேட்டை தான் என்று கூறியிருக்கிறார். செல்வராகனின் படைப்புகளில் சிறந்த படம் இதுதான். தனுஷ் தனது விஸ்வரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

லோகேஷ் கனகராஜை விமர்சித்த பிரபலம்

அரசியல் ஆதாயத்திற்காக கூலிப்படையாக பயன்படுத்துவோரின் வாழ்க்கையை வெகு இயல்பாக காட்டி இருப்பார்கள். அதன் பிறகு பல கேங்ஸ்டர், அரசியல் படங்கள் வந்தாலும் எதுவும் உச்சம் தொடவில்லை. ஏன் செல்வராகவனே நினைத்தால் கூட இது போன்ற படத்தை இனிமேல் எடுக்க முடியாது.

கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் போன்றோர் எடுப்பதெல்லாம் செயற்கையான கேங்ஸ்டர் படங்கள் என்று ப்ளூ சட்டை மாறன் பதிவு போட்டிருக்கிறார். அதேபோல் புதுப்பேட்டை படத்தின் ஒவ்வொரு காட்சியும் அட்டகாசமாக அமைந்திருக்கும்.

படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிபரப்பு என அனைத்துமே சிறப்பு. படத்தில் நடித்த நடிகர்கள் உண்மையிலேயே ரவுடிகளா என பார்த்து பயப்படும் அளவுக்கு மிரள வைத்திருப்பார்கள். புதுப்பேட்டை படம் வெளியாகி 19 வருடங்கள் ஆகிறது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.