Rajini : விஜய் இப்போது சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலுமே பிசியாக இருக்கிறார். அவருடைய ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. ஒருபுறம் அரசியல் மாநாடு என பல இடங்களுக்கு சுற்றி திரிந்து வருகிறார்.
அதோடு பத்தாம் மற்றும் 12ம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்த வருடம் மூன்றாவது ஆண்டாக இதை செய்ய இருக்கிறார். இந்த சூழலில் விஜய் மீது நீண்ட வருடங்களாக ரஜினிக்கு பகை இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கிறார்.
அதாவது சினிமாவில் ரஜினியை பின்னுக்கு தள்ளி விஜய் முதலிடத்தில் வந்ததால் தலைவருக்கு காண்டு இருக்கிறது. அதனால் தான் ஜெயிலர் பட விழாவில் காக்கா, கழுத என கதை சொல்லி கதறினார். அதோடு என்னுடைய பட்டத்தை பறிக்க 100 பேர் என்று பதறினார்.
விஜய்யை வீழ்த்த திட்டம் போட்ட ரஜினி

விஜய் அரசியலில் இறங்கி இருப்பதால் அவர் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக பிளான் ஒன்று போட்டு இருக்கிறார். அதாவது அண்ணாமலையை தனிக்கட்சி ஆரம்பிக்க வைப்பதன் பின்னணியில் ரஜினிகாந்த் இருக்கிறார் என்று தமிழா பாண்டியன் கூறி இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு ரஜினி தமிழகத்தை ஆள ஒரு இளைஞர் வரப்போகிறார் என்று கூறியிருந்தார். அதன் பிறகு தான் பாஜக தலைவன் ஆனார் அண்ணாமலை. இப்போது அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ரஜினிக்கு பிடித்த இமயமலை பாபா குகைக்கு சென்று வழிபட்டார்.
அதன் பிறகு அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்து ஓரளவு வாக்கி வங்கி பெற்ற பிறகு மீண்டும் பாஜகவில் இணைய உள்ளார். விஜய்யின் வாக்குகளை சிதறடிக்க ரஜினி போட்ட பிளான் தான் இது. வழக்கம்போல் ரஜினியின் ராஜதந்திரம் இந்த முறையும் வீணா போவது உறுதி என ப்ளூ சட்டை மாறன் பதிவு போட்டிருக்கிறார்.