வீரா சீரியலில் மாறன் சொன்னபடி விஜியிடம் நடிக்கும் கார்த்திக்கு.. பிருந்தாவுக்கு புரிய வைத்த வீரா

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், பிருந்தா ஏதோ ஒரு சூழ்ச்சியுடன் தான் கார்த்திக்கை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கிறார் என்று வீரா மாறனுக்கு தெரிந்து விட்டது. ஆனால் என்ன சூழ்ச்சி, அதற்கான ஆதாரம் எப்படி கண்டுபிடிப்பது என்பதை தெரியாமல் இரண்டு பேரும் முழித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் கார்த்திகை சந்தித்து மாறன் மற்றும் வீரா சொன்னது என்னவென்றால் கடைசி ஒரு சான்ஸ் நம்மிடம் இது மட்டும்தான் இருக்கிறது. இதை நீங்கள் செய்தால் மட்டும் தான் விஜி பற்றிய உண்மையை கண்டுபிடிக்க முடியும் என்று வீரா சொல்கிறார்.

அந்த வகையில் விஜி மீது கரிசனம் காட்டும் விதமாக நன்றாக பேசி கொஞ்சம் கொஞ்சமாக விஜியை நம்ப வைத்து அதன் பின் விஜியின் பின்னணி விஷயங்களை கண்டுபிடிக்கும் விதமாக கார்த்திக்கிடம் வீரா சொன்னார். உடனே கார்த்திக்கும் சரி என்ற சொல்லி விஜியிடம் கோபப்படாமல் சாதாரணமாக பேச ஆரம்பித்து விட்டார்.

ஆனால் இந்த பிளான் எதுவும் தெரியாத பிருந்தா, கார்த்திக் விஜியிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபப்பட்டு விட்டார். அதனால் இனியும் உன்னுடன் இருந்து பிரயோஜனமில்லை என்று கோபத்துடன் துணியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்புவதற்கு தயாராகி விட்டார்.

கார்த்திக் என்ன சொல்ல வருகிறார் என்பதை கூட பிருந்தா காது கொடுத்து கேட்கவில்லை. அந்த நேரத்தில் வீரா மற்றும் மாறன் வந்து நாங்கள்தான் கார்த்திகை நடிக்க சொன்னோம். விஜியிடம் இப்படி பேசினால் மட்டும்தான் உண்மையை கண்டுபிடித்து விஜியின் சுயரூபம் என்ன என்பதை இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு காட்ட முடியும்.

அதனால் கார்த்திக் மீது எந்த தவறும் இல்லை நீ நினைக்கிற மாதிரி பயப்படவும் தேவையில்லை என்று வீரா எடுத்துச் சொல்கிறார். அந்த வகையில் வீரா மற்றும் மாறன் இருவரும் சேர்ந்து போட்ட பிளான் படி கூடிய சீக்கிரத்தில் விஜி பற்றிய ரகசியம் அனைவருக்கும் தெரிய வந்துவிடும்.