நழுவிப்போன தனுஷ் கையில் இருந்த அதிர்ஷ்டம்.. பக்காவா அருள் கிடைத்தும் ஆசையில் விழுந்த மண்

தனுசுக்கு மட்டும் தொட்டதெல்லாம் தங்கமாகிக் கொண்டிருக்கிறது. தற்போது அவர் நடிப்பில் குபேரா மற்றும் இட்லி கடை படம் வெளிவர இருக்கிறது. இட்லி கடை படத்தை இயக்கி வரும் தனுஷ் கிளைமாக்ஸ் காட்சி வேலைகளில் பிஸியாக இருக்கிறார். பேங்காக், தாய்லாந்து போன்ற இடங்களில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டு படத்திற்கு பின்னர் தனுஷ் தனது ஐந்தாவது படத்தை, தானே இயக்கவிருந்தார். ஏற்கனவே ப பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ( இன்னும் வெளிவரவில்லை) இந்த நான்கு படங்களை இயக்கியுள்ளார். 5வது படத்தை இயக்குவதற்குள் அவரது ஆசையில் மண் விழுந்து விட்டது.

தனுஷ், அஜித்திற்கு ஒரு கதை சொல்லியுள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசியும் வருகிறார்கள். 2,3 முறை நேரில் சந்தித்தும் உள்ளனர். துபாயில் இருக்கும் அஜித் கார்பந்தய போட்டிகளில் பிஸியாக இருக்கிறார் அதனால் அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனுஷ் இயக்கத்தில் நடிக்க இருந்தாராம்.

பலம் நழுவி பாலில் விழுந்தது போல் அமைந்த இந்த கூட்டணி, இத்தோடு நின்று போவது போல் பிரச்சனை எழுந்துள்ளது. சமீபத்தில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ED ரெய்டில் மாட்டிக் கொண்டுள்ளது. அவர்கள் தான் இந்த படத்தை தயாரிக்கவிருந்தினர்.

இப்பொழுது தனுஷ் – அஜித் கூட்டணி அமலாக்கத்துறை பிரச்சினையால் நின்று போனதையொட்டி அஜித் மீண்டும் 90 சதவீதம் ஆதிக்ரவிச்சந்திரனுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார் என்று தெரிகிறது. ஆனால் அஜித் கேட்கும் 200 கோடிகள் சம்பளத்துக்கு எந்த கார்ப்பரேட் நிறுவனம் ஒத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →