அஜித்தால் சரிந்து போன சன் நெட்வொர்க்கின் டிஆர்பி.. போட்ட அக்ரிமெண்டை கேன்சல் செய்த சேனல்

ஓடிடி பிளாட்பார்ம் வந்த பிறகு சேனல்களில் படம் பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் பெரும்பாலும் பெரிய சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் மந்தமாகியுள்ளது. பல கோடிகள் கொடுத்து சேட்டிலைட் உரிமைகளை வாங்குவதற்கு சேனல்கள் தயக்கம் காட்டி வருகிறது .

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி தந்தது. 100 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகிய இந்த படத்தை நெட்பிலிக்ஸ் ஒடிடி தளம் 95 கோடிகள் கொடுத்து டிஜிட்டல் உரிமையை வாங்கியது. மே 8-ம் தேதி இந்த படம் அவர்களது தளத்தில் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் வாங்குவதாக அக்ரிமெண்ட் போட்டுள்ளது. சுமார் 32 கோடிகளுக்கு விலை பேசியும் உள்ளனர். இதற்காக அட்வான்ஸ் தொகையும் கொடுத்து இந்த படத்தை லாக் செய்துள்ளது சன் நெட்வொர்க்.

அந்த நேரத்தில்தான் அஜித்தின் விடாமுயற்சி படத்தை சன் டிவியில் ஒளிபரப்பு செய்துள்ளனர். இந்த படத்தை ஒளிபரப்பு செய்த அந்த நேரத்தில் சன் டிவியின் டிஆர்பி மிகவும் மந்தமான நிலைக்கு சென்றுள்ளது. பெரும்பாலும் மக்கள் ஓ டி டி யில் தான் படங்களை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

விடாமுயற்சி படத்தை சுமார் 250 கோடிகள் கொடுத்து வாங்கிய சன் டிவி இதை ஏப்ரல் 14ஆம் தேதியில் ரிலீஸ் செய்தது. அப்பொழுதுதான் சன் டிவி இதுவரை இல்லாத மோசமான டிஆர்பிஐ சந்தித்துள்ளது. இவ்வளவு அதிக தொகைக்கு வாங்கிய போதிலும் நஷ்டம் தான் என சுதாரிக்க தொடங்கியது. அதனால் இப்பொழுது குட் பேட் அக்லி படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டனராம்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →