அஜித்துடன் ஜோடி போடும் 2 நடிகைகள்.. AK 64 பட அப்டேட்

Ajith : அஜித்துக்கு இந்த வருடம் இரண்டு படங்கள் வெளியானது. முதலாவதாக வெளியான விடாமுயற்சி கைவிட்டாலும் குட் பேட் அக்லி லாபத்தை கொடுத்தது. இந்த இரண்டு படங்களிலுமே அஜித்துக்கு ஜோடியாக அடுத்தடுத்து திரிஷா நடித்திருந்தார்.

ஆனால் குட் பேட் அக்லி படத்தில் திரிஷாவுக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்று விமர்சிக்கப்பட்டது. இதற்கு திரிஷாவும் தனது சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்து பதிவு போட்டிருந்தார். மேலும் குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்திருந்தார்.

அஜித்தின் ஃபேன் பாய் ஆதிக் என்பதால் மற்ற அஜித் படங்களின் ரெஃபரன்ஸை வைத்து இந்த படத்தை எடுத்திருந்தார். ஆனால் இப்போது ஏகே 64 படத்தின் இயக்குனரும் ஆதிக் தான். இதில் நல்ல கதை கொண்ட ஒரு படத்தை அஜித்க்காக எடுக்க உள்ளாராம்.

ஏகே 64 படத்தில் அஜித்துடன் ஜோடி போடும் இரண்டு நடிகைகள்

கிட்டத்தட்ட ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் கூட்டணி உறுதியாகிவிட்டது. இந்தப் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஏற்கனவே குட் பேட் அக்லி படத்தில் பழைய பாடல்கள் பயன்படுத்ததாக சர்ச்சை வெளியாகி இருந்தது.

மேலும் ஏகே 64 படத்தில் அஜித்துடன் இரண்டு நடிகைகள் ஜோடி போட உள்ளனர். முதலாவதாக அஜித்தின் பில்லா, விசுவாசம் போன்ற படங்களில் ஜோடி போட்ட நயன்தாரா மீண்டும் அஜித்துடன் இணை இருக்கிறார். இப்போது நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

அடுத்ததாக சூர்யாவின் ரெட்ரோ படத்தில் நடித்த பூஜா ஹெக்டே அஜித்துடன் ஜோடி போட இருக்கிறார். மேலும் ஏகே 64 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →