முத்துவை துரத்திக் கொண்டு வரும் நிலா.. டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவிக்கு அடித்த ஜாக்பாட்

Vijay Tv Serial: ரியாலிட்டி ஷோ மூலம் கெத்து காட்டி வந்த விஜய் டிவி கொஞ்சம் கொஞ்சமாக சீரியலுக்கு மாறி சன் டிவியுடன் போட்டி போடும் அளவிற்கு புதுசு புதுசாக சீரியல்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் சன் டிவி சீரியலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது விஜய் டிவி தான். ஆனால் இந்த முறை வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி என்னதான் முதலிடத்தை பெற்றிருந்தாலும் கம்மியான புள்ளிகளை பெற்றிருக்கிறது.

இதனால் விஜய் டிவி கொஞ்சம் கொஞ்சமாக சன் டிவி சீரியலை ஓவர் டேக் பண்ணுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் சிறகடிக்கும் ஆசை சீரியல் தான் தொடர்ந்து பல மாதங்களாக முதலிடத்தில் இருந்து வருகிறது. அதே மாதிரி இந்த வாரமும் 7.42 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் புதுசாக வந்த அய்யனார் துணை சீரியல், சிறகடிக்கும் ஆசை சீரியலுக்கு போட்டியாக வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் அய்யனார் துணை 7.10 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.68 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் இதில் அரசி சொதப்பியதால் குமரவேலுவின் மனைவியாக சக்திவேல் வீட்டில் வாழும்படி நிலைமை ஆகிவிட்டது.

இதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு பார்ப்பவர்களுக்கு கடுப்பாக இருக்கிறது. இதில் ஏதாவது ஒரு ட்யூஸ்ட் வரும் அளவிற்கு கதை நகர்ந்தால் டிஆர்பி ரேட்டிங்கில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக மக்களின் பேவரிட் சீரியலாக இருக்கும் மகாநதி சீரியல் இந்த வாரம் 6.18 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

அதிலும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த விஜய் காப்பாற்றும் விதமாக புத்திசாலித்தனமாக முயற்சி செய்த காவேரி செயல்கள் அனைத்தும் மக்களை அதிக அளவில் கவர்ச்சி விட்டது. வெண்ணிலாவின் பிரச்சனை முடிவுக்கு வரும் வகையில் பசுபதி மற்றும் ராகினியின் கொட்டம் அடங்கப் போகிறது. அடுத்ததாக சின்ன மருமகள் சீரியல் 5.03 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

இதுவரை கர்ப்பம் இல்லாமல் எல்லோரையும் ஏமாற்றி வந்த தமிழ் தற்போது உண்மையிலேயே கர்ப்பமாக இருக்கிறார் என்பதை சேதுவிடம் சொல்லியும் சேது காது கொடுத்து கேட்காமல் தமிழை திட்டி அலசியப்படுத்துகிறார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று விஜய் டிவி சீரியல்கள் முன்னேறி கொண்டு வருகிறது.