ED வளையத்துக்குள் சிக்கும் ரவி மோகன்.. அடுத்தடுத்து ஆட்டும் ஏழரை சனி

Ravi Mohan : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். இதில் டாஸ்மாக் சம்பந்தமான ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தொழிலதிபர் ரத்தீசும் இந்த வழக்கில் சிக்கி இருக்கிறார்.

மேலும் ஆகாஷ் பாஸ்கரன் தனுஷின் இட்லிகடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி மற்றும் எஸ்டிஆர் 49 ஆகிய படங்களை தயாரிக்கிறார். இந்த படங்கள் அமலாக்க துறையினரால் முடக்கப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த வளையத்திற்குள் ரவி மோகனும் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது இப்போது ரவி மோகன் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்கப்படுகிறது. இதற்கு ரித்தீஷ் குறிப்பிட்ட தொகையை கொடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரவி மோகன் சிக்கும் அடுத்த பிரச்சனை

ஆகையால் இந்த படத்தில் கதாநாயகனாக ரவி மோகன் நடித்து வருவதால் அவரும் விசாரிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்போது தான் ஆர்த்தி மற்றும் ரவி மோகன் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

விவாகரத்து வழக்கில் இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி குறை கூறி வந்தனர். மேலும் கோர்ட் இவர்கள் சமூக வலைத்தளங்களில் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டனர். அதேபோல் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை நீக்கிவிட்டனர்.

தற்போது புது பிரச்சனையாக ரவி மோகனுக்கு அமலாக்கத்துறை ரைட் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு அடி மேல் அடி ரவி மோகனுக்கு வந்து கொண்டிருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →